Thursday, March 28, 2024
Home > செய்திகள் > நெல்லையில் பரபரப்பு..! அருண்குமாராக மாறிய இம்ரான்

நெல்லையில் பரபரப்பு..! அருண்குமாராக மாறிய இம்ரான்

29-4-22/9.32AM

திருநெல்வேலி : முகநூல் முலம் தன்னை ஒரு ஹிந்துவாக அடையாளப்படுத்தி மலேசிய பெண்ணுடன் பழகி ஏமாற்றிய இம்ரான் என்பவர் மீது பாதிக்கப்பட்டவர் திருநெல்வேலி டவுண் அனைத்துமகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மலேசியாவில் வசித்து வருகிறார். அவரது மகள் திருநெல்வேலி டவுண் பகுதி சிக்கந்தர் தெருவை சேர்ந்த இம்ரான் என்பவர் தன்னை காதலித்து கர்ப்பமாக்கி 15 லட்சம் வரை பணத்தையும் அபகரித்ததாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இம்ரான் மலேசியாவில் பணிபுரிந்தபோது தனது தோழியின் திருமணத்தில் பாதிக்கப்பட்டவருடன் அறிமுகமாயிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து முகநூலில் பழக்கமாகி தனது காதல்வலையை விரித்திருக்கிறார். அந்த பெண்ணும் இம்ரானின் ஆசைவார்த்தையில் மயங்கி காதல்வசப்பட்டிருக்கிறார். மேலும் தான் ஒரு ஹிந்து எனவும் தனது பெயர் அருண்குமார் எனவும் கூறியிருக்கிறார். நாளடைவில் அவர் ஒரு இஸ்லாமியர் என தெரியவரவே பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.

`

தான் ஹிந்துவாக மாறி திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். மேலும் தான் தருண் என பெயர் மாற்றிக்கொண்டதாக போலியான சான்றிதழ்களை காண்பித்து அந்த பெண்ணை ஏமாற்றியிருக்கிறார். அதையடுத்து 2019ல் இருவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கோவிலில் திருமணம் நடந்தேறியுள்ளது.

திருமணத்தை பதிவுசெய்ய கூறியபோது உஷாரான இம்ரான் முக்கியவேலை இருக்கிறது என பொய்சொல்லி அந்த பெண்ணை துபாய்க்கு அழைத்துச்சென்றிருக்கிறார். அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அபலைப்பெண் உணர்ந்திருக்கிறார். ஆறுமாத கர்ப்பிணியான அந்த அபலைப்பெண் நெல்லை டவுன் அனைத்துமகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

```
```

இந்த புகாரின் அடிப்படையில் இம்ரானை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரிக்கையில் இம்ரான் காவல்நிலையத்திலிருந்து தப்பியோடினார். மீண்டும் போலீசார் பிடித்து வந்து விசாரிக்கையில் மர்ம நபர்கள் கொண்ட இம்ரானின் ஆதரவாளர்கள் அவரை மீட்டுச்சென்றதாக கூறப்படுகிறது. இம்ரானை இன்னும் காவல்துறை கைதுசெய்யாத நிலையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகாரளித்துள்ளார் அந்த பெண்.

மேலும் தனது நகை பணம் எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு தான் ஒரு ஹிந்து என பொய்யான சான்றிதழை காண்பித்து ஏமாற்றிவிட்டதாகவும் அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

…..உங்கள் பீமா