20-4-22/16.52pm

புதுதில்லி : இந்தியாவில் மிகமுக்கியமான நகரங்களில் உள்ள முக்கியமான மசூதிகள் மற்றும் மாற்றுமத வழிபாட்டுத்தலங்கள் ஹிந்துக்கோவில்களை இடித்து தரைமட்டமாக்கப்பட்டு அல்லது அதன் மேலேயே எழுப்பப்பட்டிருப்பதாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மத்திய பிரதேசம் போபாலில் நடந்த உலகபாரம்பரிய தினத்தில் பேசிய பிரபல தொல்பொருள் ஆய்வாளர் கே.கே.முஹம்மது ” குதுப்மினார் மற்றும் அதன் அருகே உள்ள குவாத்-உல்-இஸ்லாம் மசூதி ஆகியவை 27 கோவில்களை இடித்து கட்டப்பட்டிருக்கின்றன. இதற்கான ஆதாரங்கள் குதுப்மினாரில் இருக்கிறது. பல விநாயகர்சிலைகள் உள்ளே இருக்கிறது.

கஜினி மற்றும் பிற முகலாய ஆட்சியாளர்களின் காலத்தில் இந்த மினார்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இடைக்காலத்தில் பல தவறுகள் நடந்துள்ளது. இதற்க்கு இரு சமூகங்களுமே பொறுப்பு. கம்யூனிஸ்ட் சித்தாந்த வரலாற்றாசிரியர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு உண்மையை மறைக்க முயல்வதுதான். கோவில்கள் இடிக்கப்பட்டது உண்மைதான். உண்மையை மறைப்பதில் எந்த பயனும் இல்லை. பிரித்விராஜ் சௌகான் பலசௌகான்களின் தலைநகராக இருந்த நகரம் இது.

தற்போது குதுப்மினார் இருக்கும் இடத்தில் பல விநாயகர் சிலை இருந்தது. கோவில்களை இடித்தே மசூதி எழுப்பப்பட்டது ” என குறிப்பிட்டார். மேலும் டெல்லி சுற்றுலாத்துறை இணையதளத்தில் “73 மீட்டர் உயரமுள்ள குதுப்மினார் 27 ஹிந்து மற்றும் ஜெயின் கோவில்களை தகர்த்து பெறப்பட்ட பொருட்களை கொண்டு கட்டப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குதுப்மினார் வளாகத்தில் உள்ள விநாயகர் சிலையை அகற்ற மத்திய தொல்பொருள் ஆராய்ச்சித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் வரும் மே 17 வழக்கு விசாரணைக்கு வரும் என கூறியுள்ளது.

குதுப்மினார் வளாகத்தில் உள்ள ஜெயின் மற்றும் ஹிந்து கடவுளர்களுக்கு பூஜை செய்து வழிபட விஹெச்பி மற்றும் ஜெயின் அமைப்புகள் நீதிமன்றத்தில் அனுமதிகேட்டு மனு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
…..உங்கள் பீமா