9-11-21/ 15.30pm
கொளத்தூர்; நிவாரணப்பணியில் ஈடுபட்ட பிஜேபியினரை திமுக அமைச்சர் சேகர்பாபு மிரட்டிய காணொளி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சென்னையில் பெய்யும் தொடர்மழை காரணமாக மாநகரம் முழுவதும் வெள்ளக்காடானது. நங்கநல்லூர் கொளத்தூர், வடசென்னை, திநகர், எழும்பூர், நங்கநல்லூர் ஆதம்பாக்கம் மற்றும் வேளச்சேரி ஆகிய முக்கியமான பகுதிகள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் பிஜேபியினர் நிவாரணப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை மற்றும் பிஜேபி பிரமுகர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்கள் உதவிக்காக ஹெல்ப் லைன் என்னும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொளத்தூர் பகுதியில் நிவாரணப்பணியில் ஈடுபட்டிருந்த பாஜக தொண்டர்களை அமைச்சர் சேகர்பாபு மிரட்டியதாக பிஜேபி தலைவர் அண்ணாமலை வீடியோ ஒன்றை வெளியிட்டு “கொளத்தூர் தொகுதியில் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த பிஜேபி தொண்டர்களை ஆளும் கட்சியினுடைய அமைச்சர் திரு. சேகர் பாபு அவர்கள் மிரட்டுவதை இந்த வீடியோவில் பார்க்க முடியும்!
நீங்களும் செய்ய மாட்டீர்கள் செய்பவர்களையும் விட மாட்டீர்கள். இதுதான் அறிவாலயம் கட்சியினுடைய அழகு” என குறிப்பிட்டுள்ளார்.
…….உங்கள் பீமா