Saturday, October 5, 2024
Home > செய்திகள் > கட்சியெல்லாம் விடுங்க அக்கா..! மக்களின் மனதை வென்ற அண்ணாமலை..! நெகிழ்ச்சியான வீடியோ..!

கட்சியெல்லாம் விடுங்க அக்கா..! மக்களின் மனதை வென்ற அண்ணாமலை..! நெகிழ்ச்சியான வீடியோ..!

10-11-21 / 13.10pm

சென்னை: தமிழகத்தில் பெய்துவரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையில் ஆங்காங்கே வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பொது மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கனமழை தொடங்கிய நாளிலிருந்து ஓய்வெடுக்காமல் நிவாரணப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் சென்னை கொளத்தூர் பகுதி மற்றும் சேரிகளுக்கெல்லாம் சென்று விளிம்புநிலை மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் தமிழக பிஜேபி சார்பில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மக்கள் அண்ணாமலை அவர்களை முதல்வர் போல பாவித்து தங்கள் குறைகளை கொட்டித்தீர்த்தனர்.

அதையெல்லாம் பொறுமையாக கேட்டறிந்த அண்ணாமலை அவர்கள் குறையை விரைவில் தீர்த்து வைப்பதாக வாக்குறுதியளித்தார். மேலும் அங்கு இருந்த சில மக்கள் “வீட்டுக்குள்ளருந்து தண்ணி ஊறிக்கிட்டே வருது. அந்த கட்சிக்காரங்க ஒட்டு கேக்கறப்போ வந்தாங்க. போர்வெல் போட்டு தரேன்னு சொன்னாங்க ஆனா மழை வந்தப்றமா எட்டிக்கூட பாக்கல” என கண்ணீர் மல்க கூறினர்.

`

இதற்கு பதிலளித்த தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை ” அக்கா கட்சியெல்லாம் விடுங்க. மனிதாபிமான அடிப்படையில் பண்ணித்தறோம். அடுத்த வருஷம் உங்களுக்கு இந்த நிலைமை வராது” என உணர்ச்சி மேலிட பேசினார்.

```
```

அங்கிருந்த மக்கள் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி சொல்லி பாராட்ட ஆரம்பித்தது பார்ப்போரை நெகிழ செய்தது.

……உங்கள் பீமா