Thursday, March 28, 2024
Home > அரசியல் > குஜராத்தை குறிவைக்கும் எதிர்க்கட்சிகள்..! பிரதமர் மோடி அவசர ஆலோசனை..!

குஜராத்தை குறிவைக்கும் எதிர்க்கட்சிகள்..! பிரதமர் மோடி அவசர ஆலோசனை..!

13-3-22/11.11am

குஜராத் : நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தல்களில் நான்கு மாநிலங்களை தக்கவைத்துக்கொண்டது போல குஜராத்தையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு பிஜேபி காய்களை நகற்றி வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறுகையில் தேர்தல்கள் முடிந்துவிடவில்லை. சோர்வடையாதீர்கள் குஜாரத்தில் வெற்றிகாண்போம் என கூறியுள்ளார்.

பிரதமர் மோடி நேற்று முன்தினம் காந்திநகர் முதல் அஹமதாபாத் வரை பேரணி சென்றார். அந்த பேரணியில் முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் மாநில பிஜேபி தலைவர் சி.ஆர்.பாட்டில் ஆகியோர் கலந்துகொண்டனர். பிரதமர் மோடியை வரவேற்க வழிநெடுகிலும் மக்கள் திரண்டு ஆரவாரம் செய்தனர். மேலும் மோடி மோடி என கோஷங்களை எழுப்பினர். அவர்களை நோக்கி மோடி வெற்றிக்குறியீடான வி அடையாளத்தை காண்பித்தார். பலர் அவர்மீது பூமாரி பொழிந்தனர்.

`

பேரணி முடிந்து காந்திநகரில் நிர்வாகிகள் மற்றும் முதல்வரை சந்தித்த பிரதமர் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தினார். ராகுல் தற்போதே குஜராத் தேர்தலை குறிவைக்க ஆம் ஆத்மீயும் குஜராத்தில் தனது கட்சியை பலப்படுத்த உள்ளது.

```
```

குஜராத்தில் 182 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க 92 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா