6-11-21/ 14.43pm
இஸ்லாமிய கழகத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நடந்தேறியிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் செயல்பட்டுவருகிறது. இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் உறுப்பினராக இருப்பதாக சொல்லப்படுகிறது.
`
இந்த கழகத்தில் தலைமையின் பேச்சை கேட்காமல் காலத்துக்கு கட்டுப்படாமல் சிலர் செயல்படுவதாக புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தன. இந்த கழகத்தில் இருவேறு அணிகளாக பிரிந்து கொண்டு இன்று மோதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதையடுத்து ஒரு பிரிவு இஸ்லாமியர்கள் 50க்கும் மேற்பட்டோர் செய்யார் புறவழிசாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
``````
……ஆய்ஷா ரகுமான்