Friday, May 20, 2022
Home > அரசியல் > முதல்வரை கலாய்த்த பிஜேபி தலைவர் அண்ணாமலை….! கடும்கோபத்தில் முதல்வர் ஸ்டாலின்..!

முதல்வரை கலாய்த்த பிஜேபி தலைவர் அண்ணாமலை….! கடும்கோபத்தில் முதல்வர் ஸ்டாலின்..!

6-11-21/ 13.47pm

தமிழக அரசியலில் இதுவரை அடுக்கடுக்கான பதில் சொல்ல முடியாத கேள்விகளை திமுக மட்டுமே எழுப்பி வந்தது. அந்த பாணியில் இருந்து முற்றிலும் விலகி ஆதாரப்பூர்வமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை அதிரடியாக கேள்விகளை எழுப்புவது திமுகவுக்கு எரிச்சலை உண்டுபண்ணியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த அஸ்வினி எனும் பெண் வீட்டிற்கு முதல்வர் சென்றது பேசுபொருளாகியிருக்கிறது. இதுகுறித்து அண்ணாமலை அவர்கள் தனது பதிவில் “சகோதரி அஸ்வினி இல்லத்திற்கு முதலமைச்சர் சென்று வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அநீதி யாருக்கும் நடக்கக் கூடாது என்பது தமிழக பிஜேபியின் நிலைப்பாடு. மத்திய அரசினுடைய முத்ரா கடன் திட்டத்தையும், சுவா நிதி திட்டத்தையும் அஸ்வினி அவர்களுக்கு அறிமுகப்படுத்தியதற்காக முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகள்.

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுடைய அனைத்து திட்டங்களும் சகோதரி அஸ்வினி போன்றவர்களுக்கு தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.தமிழக முதல்வர் அனைத்து மத்திய அரசு திட்டங்களையும் மக்களுக்கு இதேபோல் நேரடியாக எடுத்துச் செல்வார் என்று நம்புகின்றோம்.” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிஜேபியினர் “தமிழக மக்களுக்கு நலத்திட்டங்கள் ஏதும் அறிவிக்காமல் மத்திய பிஜேபி அரசு கொண்டுவந்த திட்டங்களில் முதல் ஆளாக ஸ்டிக்கர் ஓட்டுவதிலேயே திமுக குறியாய் இருக்கிறது.” என விமர்சிக்கின்றனர். அண்ணாமலையின் அடுத்தடுத்த கேள்விகளால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மீது முதல்வர் கடும் கோபத்தில் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

……உங்கள் பீமா

#annamalai #jibes #cm #mkstalin

pic credit ; india today

Leave a Reply

Your email address will not be published.

error: Content is Protected! © The Madras Telegram