5-11-21/ 5.55AM
நாம்தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது மட்டுமில்லாமல் மக்களிடையே பிரிவினையை புகுத்துகிறார் என பல்வேறு தரப்பினர் விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் நாம் தமிழர் தம்பிகள் தமிழன் ஸ்டாக் என ட்ரெண்ட் செய்து தமிழ்நாடு நாள் நவம்பர் 1 மட்டுமே தமிழ்நாடு நாள் என குறிப்பிட்டிருந்தனர். மேலும் திமுகவினரை காட்டமாக விமர்சித்திருந்தனர். மேலும் திமுக தலைவர் ஸ்டாலினை தொடர்ந்து ஒவ்வொரு மேடையிலும் அவதூறாக பேசிவந்தனர்.
இந்நிலையில் நவம்பர் 1 அன்று சேலம் அம்மாபேட்டையில் தமிழ்நாடு நாள் என கூறி சேர சோழ பாண்டியர்கள் முத்திரை பதித்த மஞ்சள் நிற கொடியை அறிமுகம் செய்து இதுவே தமிழர் கொடி. இதுவே தமிழர் சின்னம் என உரையாற்றியிருக்கிறார். திமுகவின் அறிக்கைக்கு நேர்மாறாக சீமான் செயல்பட்டதால் தற்போது சிக்கலில் மாற்றியிருக்கிறார்.
சேலம் அம்மாபேட்டை கிராம அலுவலர் கொடுத்த புகாரின் பெயரில் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுகுறித்து “சேலம் ஆம்மாபேட்டையில் மூவேந்தர் சின்னம் அச்சிடப்பட்ட கொடியை ஏற்றி இரு கோஷ்டிகளுக்கு இடையே மோதலை தூண்டும் வகையில் தனி மாநில கொடி ஏற்றியுள்ளார். கிராம அலுவலர் ராஜா அளித்துள்ள புகாரின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
மேலும் சீமான் மீது இந்திய தண்டனை சட்டம் 124A (தேசத்துரோகம்) 143(சட்டவிரோத கூட்டம் ) 153A(மதம் இனம் அடிப்படையில் இரு குழுக்களிடையே பகைமை உருவாக்குதல் மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கு கேடு செய்தல் ) 269 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
கல்யாணராமன் கிஷோர் கே சாமி போன்றவர்களை அதிரடியாக இரவோடு இரவாக கைது செய்த காவல்துறை சீமான் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என எதிர்க்கட்சிகள் கேவியெழுப்புகின்றன.
……..உங்கள் பீமா
#ntk #seeman #sedition #salem