15-12-21/9.57am
தமிழகம் :ஆ.விஜயங்கொண்டம் பெரிய கருக்கை கிராமத்தைச் சேர்ந்த அரசுப்பேரூந்து நடத்துநர் ராதாகிருஷ்ணன். ஏற்கெனவே மூன்று மனைவிகள் இருந்தும் இவருக்கு வாரிசு இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் இடையே ஒரு இனம்புரியாத உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அந்த கள்ளக்காதலிக்கு மூன்று பெண்குழந்தைகள் உள்ளதாக தெரிகிறது. ராதாகிருஷ்ணனின் சொத்துக்களை பற்றி தெரிந்து கொண்ட அந்த காதலி சொத்தை அடைய முயற்சித்ததாக தெரிகிறது.

அதன் முதல்படியாக அந்த கள்ளக்காதலி ராதாகிருஷ்ணனுக்கு 13 வயதே ஆன எட்டாம்வகுப்பு படித்து வந்த தனது மகளை கடந்த ஆகஸ்ட் மதம் ராதாகிருஷ்ணன் தாயாரை துணை வைத்து கோவிலில் திருமணம் முடித்து வைத்திருக்கிறார். இந்தத் திருமணம் தொடர்பாக, அரியலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்குத் தகவல் கிடைக்கவே, தற்போது ராதாகிருஷ்ணனும் சிறுமியின் தாயாரும் போக்சோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது சிறுமி நான்கு மாத கர்ப்பமாக உள்ளதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அரியலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் துரை “ராதாகிருஷ்ணனுக்கு வாரிசுகள் இல்லாததால் சொத்துகளைப் பெறுவதற்காக இந்த சிறுமியை தவறாகப் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. சிறுமியின் தாயார் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பேருந்தில் பயணிக்கும்போது ராதாகிருஷ்ணனோடு அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. எங்கள் குழுவினரால் மீட்கப்பட்ட அந்தச் சிறுமியை இல்லத்தில் தங்கவைத்து பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்” என கூறினார்.

மேலும் கூறுகையில் நடத்துநரின் மூன்று மனைவிகளில் யாரும் புகார் அளிக்கவில்லை. குழந்தையின் தாயார், தனது தேவைக்காக ராதாகிருஷ்ணனை பயன்படுத்திக் கொண்டுள்ளார். வாரிசு வேண்டும் என்றால் வேறு யாரையாவது அந்த நபர் திருமணம் செய்திருக்கலாம். சிறுமியை திருமணம் செய்ததன் மூலம் அந்த நபரின் நோக்கமே தவறாக உள்ளது. போக்சோ சட்டப்பிரிவு 5, 6 மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின்கீழ் அவரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
…….உங்கள் பீமா