2-12-21/14.48pm
சென்னை : சென்னை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் பெற்றோர்கள் மத்தியில் பிரபலமான பள்ளி ஒன்று முதன்மையான தலைவரின் வாரிசால் மிரட்டி வாங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் இந்துக்களால் நடத்தப்படும் பிரபலமான பள்ளிகள் கடந்த ஆறுமாதகாலமாக தொடர்ந்து மிரட்டப்பட்டு பணியவைக்கப்படுகிறது. சிலர் பிரச்சினை வேண்டாம் என பள்ளிகளை தாரைவார்த்துக் கொடுக்கும் அவலமும் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சென்னை கேளம்பாக்கம் அருகில் உள்ள பிரபலமான பள்ளி ஒன்றிற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.
அந்த தாளாளர் மறுக்கவே அவர் மீது வழக்கு பதியப்பட்டு தற்போது கம்பி எண்ண வைக்கப்பட்டுள்ளார். அதே போல சென்னையில் உள்ள இன்னொரு பள்ளிக்கு தொடர் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாக பள்ளி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த பள்ளியின் தாளாளர் பிரபல காமெடி நடிகரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னை குரோம்பேட்டை நாகப்பா நகரில் அமைந்துள்ளது பிரபலமான ஸ்ரீமதி சுந்தரவல்லி நினைவுப்பள்ளி. இந்த பள்ளி அரை நூற்றாண்டை கடந்தும் மக்களிடையே நன்மதிப்பை பெற்ற கல்வி நிறுவனம் ஆகும். இந்த பள்ளியை சந்தனம் அய்யர் என்பவர் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த ஆறுமாத காலமாக தொடர் நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து பலமான மிரட்டல் காரணமாக அவர் முதன்மையான பிரபல கட்சி தலைவரின் வாரிசுக்கு நேற்று பள்ளியை விட்டுக்கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அந்த பிரபல வாரிசு சில பள்ளிகள் நடத்தி வருவதும் அதில் சில பள்ளிகள் மிரட்டி வாங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
….உங்கள் பீமா