3-12-21/5.32am
சென்னை : அரசியல் ஏஜென்ட் ஆன பிரசாந்த் கிஷோர் சொன்ன ஒரு வார்த்தைக்காக ஜோதிமணி எம்பி கடுமையாக பொங்கி எழுந்துவிட்டார்.
ஐ பேக் நிறுவன தலைவரும் அரசியல்வாதிகளின் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பதிவில் ” காங்கிரசின் சிந்தனைகள் மற்றும் தலைமையின் வெற்றிடம் அதை எதிர்க்கட்சியாக இருக்க கூட தகுதியில்லை என்பதை நிரூபிக்கிறது. காங்கிரசுக்கு எதிர்க்கட்சியாக இருக்க கூட தகுதியில்லை என்பதை இந்த பத்து வருடங்கள் உணர்த்தியிருக்கிறது.
கடந்த பத்து வருடங்களில் தொண்ணூறு சதவிகித தேர்தலில் தோற்றுப்போய் தான் ஒரு எதிர்க்கட்சியாக இருக்க தகுதியில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது” என பதிவிட்டுள்ளார். இதை கண்டு கொதித்துப்போன ஜோதிமணி ” பாஜக தேர்தலில் வெற்றி பெற உழைத்துவிட்டு காங்கிரசை பற்றி குறைகூற எந்த தகுதியும் இல்லை உங்களுக்கு. காங்கிரசால் மட்டுமே ஆர்.எஸ்.எஸ்.மற்றும் பிஜேபி ஏஜெண்டுகளை எதிர்த்து போரிட முடியும்.
எங்களுக்கு தலைமையை தேர்ந்தெடுக்க தெரியும். பிஜேபியுடன் இணைந்து செயல்பட்டு காங்கிரசை தோற்கடித்துவிட்டு நீங்கள் அதை பேச கூடாது.” என கொந்தளித்திருக்கிறார். இதில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று என்னவெனில் கடந்த மாதம் காங்கிரசால் உருவாக்கப்பட்ட கண்காணிப்புக்குழுவில் இடம்பெற்ற பத்து பேரில் பிரசாந்த் கிஷோரும் ஒருவர்.
…..உங்கள் பீமா