இந்துக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் விதமாகவும் இந்து மத கடவுளர்களை அவமதிக்கும் நோக்கிலும் உள்நோக்கத்தோடு அமேசான் பிளிப்கார்ட் நெட்ப்ளிக்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக சில ஆண்டுகளாக புகார் எழுந்தவண்ணம் உள்ளது.
தற்போது வரப்போகிற இந்துக்களின் பண்டிகையான தீபாவளியை குறிவைத்து வந்த ஒரு விளம்பரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சியட் எனும் டயர் நிறுவனத்தால் எடுக்கப்பட்ட அந்த விளம்பரத்தில் அமிர்கான் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பிகே எனும் படத்தில் இந்துக்களின் நம்பிக்கையை பலமாக கொச்சைப்படுத்தினார் என்ற புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்த விளம்பரத்தில் இந்துக்கள் பண்டிகை திருமண விஷேசம் எனும் பெயரில் கூட்டம் கூடி சாலையை மறிக்கிறார்கள் என்றும் சாலை வாகனத்திற்க்குத்தான் பட்டாசு வெடிக்க அல்ல என்றும் கூறுவதாக அமைந்துள்ளது.
இதனால் கடுப்பான நெட்டிசன்கள் சியட் டயர் சாலைக்கு உகந்ததல்ல. அதை வாங்குவது தெண்ட செலவு என்றும். சாலையை மறித்து தொழுகை நடத்துவது நாங்களா இஸ்லாமியர்களா என்றும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் #Boycott_Hinduphobic_CEAT என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா
#aamirkhan #ceattyres #boycott_hinduphobic_ceat