Saturday, January 25, 2025
Home > அரசியல் > வாக்குசீட்டை வீணடித்த எம்.எல்.ஏ..! பறிபோன ராஜ்யசபா பதவி..!

வாக்குசீட்டை வீணடித்த எம்.எல்.ஏ..! பறிபோன ராஜ்யசபா பதவி..!

1-4-22/9.11AM

கவுகாத்தி : அஸ்ஸாம் மேலவை இரண்டு இடங்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ செய்த தவறால் மேலவைக்கான பதவியை காங்கிரஸ் இழந்தது.

அஸ்ஸாமில் உள்ள இரண்டு ராஜ்யசபா தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பிஜேபி தரப்பில் பபித்ரா மார்க்ரெட்டா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டணியான UPPL க்கு ஒரு சீட் கிடைத்துள்ளது.மாநிலங்களவையில் மொத்தமுள்ள 126 வாக்குகளில் பிஜேபி மற்றும் அதன் கூட்டணிக்கு 83 வாக்குகள் கிடைத்தன. காங்கிரசுக்கு 44 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

மேலும் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் செல்லாது என காங்கிரசே அறிவித்தது. காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் சித்திக் அஹம்மது தனது வாக்குச்சீட்டில் 1 என குறிப்பிடுவதற்கு பதிலாக ஒன்று என்று தவறாக குறிப்பிட்டு காங்கிரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார். மேலும் அவரை கட்சியிலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டது.

`

இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. மேலும் சித்திக் வேண்டுமென்றே கட்சியின் தலைமைக்கு அடிபணியவில்லை என தலைமை தெரிவித்துள்ளது. நடந்த தேர்தலில் காங்கிரசார் சிலர் பிஜேபிக்கு மறைமுகமாக வாக்களித்ததாக காங்கிரஸ் குற்றம்சுமத்தியுள்ளது.

இருந்த ஒருவாய்ப்பையும் காங்கிரஸ் தவறவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

```
```

மேலும் முதல்வர் ஹிமந்தா 2015 வரை காங்கிரசில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா