Saturday, July 27, 2024
Home > செய்திகள் > எருமை கூட கருப்பு தான்..! யுவனை சீண்டிய சீமான்

எருமை கூட கருப்பு தான்..! யுவனை சீண்டிய சீமான்

19-4-22/14.23PM

சென்னை : பாரத பிரதமர் மோடியை அம்பேத்காருடன் ஒப்பிட்டு இசைஞானி இளையராஜா ஒரு நூலில் முன்னுரை எழுதியிருந்தார். அதை தமிழகம் வாழ் திராவிடர்கள் அகில உலக சர்ச்சையாக்கி இசைஞானியை வசைபாட தொடங்கினர். இளையராஜா குறித்த விமர்சனத்திற்கு புதுவை ஆளுநர் தமிழிசை உட்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இளையராஜாவின் கருத்து அவரது சொந்த கருத்து. அதை யாரும் விமர்சிக்க தேவையில்லை என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படவாய்ப்புகள் சரியாக இல்லாத காரணத்தால் சமூக வலைத்தளங்களில் பிசியாக இயங்குகிறார்.

அடிக்கடி சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பும்விதமாக பதிவிடுவதுமுண்டு. அயாம்ய தமிழ் பேசும் இந்தியன் எனவும் ஹிந்தி தெரியாது போடா எனவும் வாசகம் அடங்கிய டிஷர்ட் அணிந்து சர்ச்சையை கிளப்பினார். இதனிடையே தனது இன்ஸ்டாக்ராமில் கறுப்பு வேஷ்ட்டி பனியன் அணிந்த புகைப்படத்தை பகிர்ந்த யுவன் அதில் கறுப்பு திராவிடன் பெருமைமிகு தமிழன் என கேப்சன் இட்டிருந்தார். இதுவும் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

`

தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை நானும் கருப்பு திராவிடன்தான் என கூறியிருந்தார். இந்நிலையில் நாம்தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “ஒன்று தமிழனாக இருக்கவேண்டும்.அல்லது திராவிடனாக இருக்கவேண்டும். இரண்டு அடையாளங்கள் ஒருபோதும் இருக்கமுடியாது என்பதை யுவன் உணர்ந்துகொள்ளவேண்டும். தேவைப்பட்டால் இந்தியன் தமிழன் திராவிடன் என கூறுகிறீர்கள். ஏன் இந்த குழப்பம். எதற்கு இத்தனை முகமூடி.

```
```

நான் ஒரு பெருமைக்குரிய கன்னடன் என யாஷ் கூறுகிறார். அதேபோல நான் தமிழன் என யுவன் பெருமையாக கூறிக்கொள்ளவேண்டும். எல்லாவற்றையும் விமர்சனம் செய்துகொண்டிருந்தால் அதுவே நோயாகிவிடும். ஆப்பிரிக்காவில் உள்ள எல்லாருமே கறுப்பாக இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் திராவிடர்களா இல்லையென்றால் எருமைமாடு கருப்பாக இருக்கிறது அதற்காக அது திராவிடரா” என செய்தியாளர்களிடம் கேள்வியெழுப்பினார்.

…..உங்கள் பீமா