Friday, June 2, 2023
Home > செய்திகள் > பிஜேபி இளைஞரணி பிரமுகர் படுகொலை..! மேற்கு வங்கத்தில் பதட்டம்

பிஜேபி இளைஞரணி பிரமுகர் படுகொலை..! மேற்கு வங்கத்தில் பதட்டம்

7-5-22/8.22AM

மேற்குவங்கம் : இந்தியாவில் அரசியல் படுகொலைகளில் முன்னணி மாநிலமாக திகழ்வது மேற்குவங்கம். அடுத்த இடத்தில் கேரள மாநிலம் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் திரிணாமூல் தொண்டர்கள் எதிர்க்கட்சியை சேர்ந்த தொண்டர்களை தேடித்தேடி வேட்டையாடுவதாக மாநில பிஜேபி தலைவர்களுள் ஒருவரான சுவேந்து அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனிடையே மேற்குவங்க திரிணாமூல் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையின் ஓராண்டு நினைவுதினத்தை நினைவுகூரும் விதமாக பிஜேபி சார்பில் மாநிலம் முழுவதும் இருசக்கர வாகன பேரணி மற்றும் உண்ணாவிரதம் ஆகியவை தொடர்ந்து பத்துநாட்கள் நடைபெற உள்ளது. இந்த பேரணிகளில் பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்பிக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கலந்துகொள்கின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாட்கள் பேரணிகளில் கலந்துகொண்டு மக்களிடம் உரையாற்றுகிறார். இந்நிலையில் நேற்று அமித்ஷா கொல்கொத்தா வருவதற்கு ஆறுமணிநேரம் முன்பு நடைபெற்ற சம்பவம் தற்போது பதட்டத்தை கூட்டியுள்ளது. பிஜேபி இளைஞரணி யுவமோர்ச்சாவின் கொல்கொத்தா மாநகராட்சி வார்டு எண் 6ல் துணைத்தலைவராக இருப்பவர் அர்ஜுன் சௌராசியா.

`

கொல்கொத்தா சித்பூரில் கைவிடப்பட்ட ரயில்வே குடியிருப்பில் ஒரு அறையில் அர்ஜுன் நேற்று காலை தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டனர். முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அமித்ஷா தலைமையிலான கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்த பிஜேபி தொண்டர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய அமித்ஷா மாநில சட்டம் ஒழுங்கை விமர்சித்ததோடு தனது கண்டனங்களை பதிவுசெய்தார். மேலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் எனக்கூறினார். மேலும் அவர் கூறுகையில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து மாநில அரசிடம் விளக்க அறிக்கை கேட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

…..உங்கள் பீமா