26-2-22/14.50pm
புதுதில்லி : நேற்று மத்திய நிதியமைச்சகம் தமிழகம், ஜார்கன்ட், கேரளா, ஒடிசா,திரிபுரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு உள்ளாட்சி அமைப்பு நிதியாக 1348 கோடியை முதல்தவணையாக விடுவித்துள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கையின்படி கர்நாடகா 375 கோடிகள், கேரளா 168 கோடிகள், ஜார்கண்ட் 112.20 கோடிகள், ஒடிசா 411 கோடிகள், தமிழ்நாடு 267.90 கோடிகள் மற்றும் திரிபுரா 14 கோடிகள் என நேற்று மொத்தமாக 1348.10 கோடி நிதி விடுக்கப்பட்டுள்ளது. மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளுக்கு இந்த நிதிஒதுக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.
மேலும் 15ஆவது நிதிக்குழு அறிக்கையின்படி 2021-22 முதல் 2025-26 வரை நகர்ப்புற உள்ளாட்சி இரண்டு வகையாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மில்லியன் மக்கள்தொகைக்கு குறைவான பகுதிகள் மற்றும் மில்லியன் மக்கள்தொகைக்கு அதிகமான பகுதிகள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நகர்புறத்தில் கழிவு சுத்திகரிப்பு, குடிநீர் தட்டுபாடில்லாமல் மக்களுக்கு கிடைக்க வழி வகை செய்தல் உள்ளிட்ட செலவினங்களுக்கு முதல் தவணையாக இந்த நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிதியாண்டில் 10,699.33 கோடிகள் இதுவரை மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகர்ப்புறங்களை கொண்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திற்கு இதுவரை எந்த நிலுவையும் இல்லை என்பது நினைவுகூரத்தக்கது.
….உங்கள் பீமா