Friday, March 29, 2024
Home > செய்திகள் > ISIS ல் சேர்ந்த இளம்பெண்..! விரைவில் மீட்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் கெடு..!

ISIS ல் சேர்ந்த இளம்பெண்..! விரைவில் மீட்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் கெடு..!

03-01-22/19.57pm

கேரளா : கேரள மாநிலம் கடவுளின் நகரம் என அழைக்கப்பட்ட காலம் மாறிப்போய் கொலைகளின் மாநிலம் என அழைக்கப்படுவதாக பலர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தீவிரவாத அமைப்பான ISIS ல் சேர இந்தியாவிலிருந்து குறிப்பாக கேரளாவில் இருந்து மட்டுமே ஆயிரக்கணக்கானோர் செல்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே 2021ல் கேரளாவை சேர்ந்த வி.ஜெ பிரான்சிஸ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தனது மகளான ஆயிஷா என அழைக்கப்படும் சோனியா செபாஸ்டின் மற்றும் ஏழு வயது பேத்தியை ஆப்கானிலிருந்து மீட்க கோரி அதில் குறிப்பிட்டிருந்தார்.

`

சோனியா செபாஸ்டியன் தஞ்சுடன் அறிமுகமான இஸ்லாமியர் ஒருவருடன் காதல் வலையில் வீழ்ந்து பெயரை மாற்றிக்கொண்டு ஆப்கான் சென்று ISIS தீவிரவாத அமைப்பில் இணைந்தார். அதன்பின்னர்அங்கு நடந்த போரில் ஆய்ஷாவின் கணவர் கொல்லப்பட்டார். தற்போது அவர் இந்தியா திரும்ப விரும்புவதாக தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

```
```

அதையடுத்து பிரான்சிஸ் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் மற்றும் நீதிபதி காவாய் ஆகியோர் இன்னும் எட்டுவார அவகாசத்திற்குள் அவர்களை நாடு கடத்தும் விஷயத்தை பரிசீலிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. காதல்வலையில் வீழ்ந்து மதம் மாறி பின்னர் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்துவிட்டு மீண்டும் தாயகம் திரும்ப ஆசைப்படும் இந்த தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவர்களை எப்படி நம்புவது. நாட்டிற்க்கே துரோகம் செய்ய மாட்டார்களா என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

…..உங்கள் பீமா