22-11-21/12.20pm
கோயம்புத்தூர் : தமிழக முதல்வர் கோயம்புத்தூர் வருவதையொட்டி #GOBACKSTALIN என இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில் பிஜேபி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்துர் பகுதியில் பத்து சீட்டுகளையும் பறிகொடுத்த திமுக அந்த நகரத்தின் வளர்ச்சிப்பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கிய தடுப்பூசி தொகுப்பிலிருந்து கோயம்புத்தூருக்கு மட்டும் திமுக அரசு கொடுக்காமல் வஞ்சித்தது என ஏற்கனவே கோயம்புத்தூர் மக்கள் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கோயம்புத்தூர் செல்லும் முக ஸ்டாலினை வரவேற்க பெரும் கூட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது நேரடி மேற்பார்வையில் ஏற்பாடு செய்கிறார். இதற்க்கு பல பக்கத்திலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்துக்களின் கோவில்களில் நடக்கும் விசேஷத்தில் பக்தர்கள் அனுமதியில்லை.கொரோனாவை காரணம் காட்டி அனுமதி மறுத்த திமுக அரசு தற்போது கூட்டம் கூட்ட முயற்சிப்பது ஏன் என பொதுமக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள வீடியோவில் “திருச்சியினுடைய தேசிய நெடுஞ்சாலை பகுதியை உடைத்து மழைநீர் சாக்கடையோடு கலந்து கோயம்புத்தூர் தெருக்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. மழைநீர் வடிகாலை தூர்வாரவேண்டும் என கடந்த மூன்று மாதங்களாக மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தான் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்.
இது தான் ஸ்மார்ட் சிட்டியின் அவலமான நிலைமை. இன்னொருபுறம் குப்பை மலை போல காட்சியளிக்கிறது. என்ன ஒரு திட்டமிடல் எனில் குப்பையை சுத்தம் செய்யவோ குடிநீர் தேவையோ ஆளும்கட்சியினரை அணுகி அவர்களிடம் முறையிட்டு அவர்கள் கண்ணசைத்தால் மட்டுமே காரியம் நடக்கிறது.
பத்து தொகுதிகளிலும் தோற்ற விரக்தியில் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுகிறது திமுக” என விமர்சித்திருக்கிறார். முக ஸ்டாலினுக்கு நல்ல பரிசு இது நல்ல வரவேற்பு இது என கோயம்புத்தூர் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
…..உங்கள் பீமா