Friday, March 29, 2024
Home > அரசியல் > ஒவ்வொரு வீட்டிலும் தாமரை மலரும்..! பிஜேபி தேசிய பொதுச்செயலாளர்

ஒவ்வொரு வீட்டிலும் தாமரை மலரும்..! பிஜேபி தேசிய பொதுச்செயலாளர்

6-4-22/16.12PM

ஸ்ரீநகர் : பிஜேபி தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே ஸ்ரீநகரில் பேசுகையில் இந்தியாவில் ஒவ்வொரு இஸ்லாமியரும் பாதுகாப்பாக உணர்கின்றனர் என குறிப்பிட்டார்.

காஷ்மீருக்கு பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் செல்ல உள்ளார். அதற்குமுன்னர் பிஜேபியின் மூத்த நிர்வாகிகள் காஸ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். பிஜேபி தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஸ்ரீநகரில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றினார்.

வினோத் தாவ்டே காஷ்மீரில் பிஜேபி தலைவர்களுடன் சந்திப்பை மேற்கொண்டார். மேலும் மத்திய காஷ்மீர் பகுதியில் உள்ள கந்தர்பால் எனும் இடத்தில் கட்சி தொண்டர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறினார் “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களுக்காக பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு உழைத்து வருகிறது.

`

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வடகிழக்கு மாநிலம் முதல் குஜராத் வரை அனைத்து மாநிலங்களும் ஒரேமாதிரியான வளர்ச்சியடைந்துள்ளது. பிரதமர் மோடி ஓய்வறியாதவர். 60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் இந்தியாவை அழித்துவிட்டது. பிஜேபி ஆட்சியில்தான் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்.

```
```

மேலும் இஸ்லாமியர்களின் பாதுகாப்பிற்காக கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானைவிட இந்தியாவில்தான் பாதுகாப்பாக இருக்கிறார்கள். காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தாமரை மலரும் நாள் வெகுதொலைவில் இல்லை. மக்கள் நம்பும் ஒரே அரசியல் கட்சி பிஜேபி மட்டுமே” என தெரிவித்தார். இதனிடையே ரமலானை முன்னிட்டு இஸ்லாமிய அரசு ஊழியர்களுக்கு இரண்டுமணிநேர பணிக்குறைப்பு என டெல்லி மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

…..உங்கள் பீமா