22-11-21/ 11.25am
சென்னை : வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழக பிஜேபி சார்பில் தலைவர் அண்ணாமலை விருப்பமனுக்களை பெற்றுக் கொண்டிருக்கிறார்.
வரவிருக்கும் நகராட்சி தேர்தல் தமிழக அரசியலை புரட்டிப்போடும் என அரசியல் விமர்சகர்கள் இப்போதே ஆருடம் கூற ஆரம்பித்துள்ளனர். அதற்கேற்றாற் போல நாகர்கோவில் மதுரை கன்னியாகுமரி சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பல வெகுஜன மக்கள் விருப்ப மனு கொடுத்து வருகின்றனர்.
அசையும் சொத்து அசையா சொத்து வங்கி சேமிப்பு நிதி கையிருப்பு போன்ற காரணிகளை வைத்து தேர்தல் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் வரலாற்றை தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார். இது திராவிடம் மட்டுமே அறிந்த தமிழக மக்களுக்கு புதிது.
என்னதான் அண்ணாமலை அப்படி செய்து விட்டார் என்று கேட்பவர்களுக்கு இந்த ஒரே விஷயத்தில் பதிலளித்து விட்டார். ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்தலைவி பள்ளி ஆசிரியர் என சாமானியர்கள் விருப்ப மனு கொடுக்கும் அளவிற்கு தன்னுடைய நேர்மையான அரசியல் மூலம் பொதுவாழ்க்கைக்கு இழுத்திருக்கிறார். இது ஒன்றே பெரும் சாட்சி.
வரவிருக்கும் நகராட்சி தேர்தல் பிஜேபிக்கு மற்றுமொரு சாதனையாய் அமையும் என பிஜேபியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா