Thursday, May 21, 2026
Home > அரசியல் > கர்நாடக முதல்வர் மாற்றமா..? அமித்ஷா திட்டவட்டம்

கர்நாடக முதல்வர் மாற்றமா..? அமித்ஷா திட்டவட்டம்

1-4-22/11.22AM

பெங்களூரு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு பெங்களூருவில் உள்ள ஹெச்.ஏ.எல் விமானநிலையம் வந்தடைந்தார். அவரை முதல்வர் பசவராஜ் பொம்மை பிரகலாத் ஜோஷி மற்றும் மாநில உயர்மட்ட தலைவர்கள் வரவேற்றனர்.

வருகிற 2023ல் கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மையை மாற்றம் செய்யப்போவதாக யூகங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்வகையில் தலைமை மாற்றம் எதுவும் இருக்காது என பிஜேபி உயர்மட்ட வட்டாரங்கள் உறுதிபட தெரிவித்துள்ளன.

அமித்ஷா இன்று காலை 10.50க்கு சித்தகங்கா மடத்தில் மறைந்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார ஸ்வாமியின் 115ஆவது பிறந்தநாள் விழாவில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் மதியம் 2.20 மணிக்கு முத்தெனஹள்ளியில் அமைந்துள்ள சத்யசாய் கிராமத்தில் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் மாலை நான்குமணிக்கு பெங்களூரு அரண்மனையில் நடைபெற இருக்கும் கூட்டுறவு மாநாட்டிலும் கலந்துகொள்கிறார்.

மேலும் அமித்ஷாவின் இந்த பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் காவலர்கள் மாற்றப்பட்டதை பசவராஜ் மாற்றப்படலாம் என பத்திரிக்கைகள் செய்திவெளியிட்டு வந்தன. ஆனால் எந்த ஒரு அழுத்தம் காரணமாகவும் பொம்மை மாற்றப்படமாட்டார் எனவும் அவர் மிகவும் திறமைவாய்ந்த அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி மற்றும் சிறந்த முதல்வர்” என உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கர்நாடக தேர்தல் பொறுப்பாளர் மற்றும் பொதுச்செயலாளர் அருண்சிங்குடன் முக்கியமான குழுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொள்கிறார். இந்த குழுவில் சில முக்கியமுடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

…..உங்கள் பீமா