22-2-22/15.00pm
சென்னை : தமிழகத்தில் ஊடகங்கள் நடுநிலை என்கிற பெயரில் ஒருகட்சிக்கு மட்டும் வால்பிடிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வரும்வேளையில் அதற்கேற்றாற்போல செய்தியாளர்களும் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
பவானிசாகர் பேரூராட்சி 11ஆவது வார்டில் பிஜேபி வேட்பாளர் நரேந்திரன் ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளார். இதை திமுக சட்டமன்ற உறுப்பினரான டி.ஆர்.பி.ராஜா ஒத்த ஒட்டு பாஜக என கிண்டலடித்துள்ளார். மேலும் பல செய்தி நிறுவனங்கள் இதையே ஒளிபரப்புகின்றன. ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சியில் திமுக மற்றும் அதிமுக ஒய்ட்வாஷ் செய்யப்பட்டது. திமுக 50க்கும் மேற்பட்ட இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 12 ஐ பிஜேபி கையகப்படுத்தியுள்ளது. நாம் தமிழர் ஒரு வார்டிலும் சுயேச்சை இரண்டு வார்டிலும் வெற்றிபெற்றிருக்கின்றனர். இதை எந்த செய்தியாளரும் குறிப்பிடவில்லை. மேலும் திமுகவினரின் கோட்டையான சென்னையில் மிகப்பலம் வாய்ந்த இரண்டாவது அரசியல்கட்சியாய் பிஜேபி உருவெடுத்திருப்பது திமுகவிற்கு குடைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் சென்னை 134 ஆவது வார்டில் பிஜேபி வேட்பாளராக போட்டியிடும் உமா ஆனந்தன் அவர்கள் எட்டு வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்திருப்பதாக புதிய தலைமுறை செய்தியாளர் நிரஞ்சன் பதிவிட்டுள்ளார். ஆனால் அந்த வாக்குச்சாவடியில் இன்னும் ஒட்டு எண்ணிக்கை ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முடிவு வரும் முன்னரே படுதோல்வி என அவர் குறிப்பிட்டிருப்பது முன்னரே திட்டமிட்டு நடந்த சதிச்செயலா என விசாரணை நடத்த வேண்டும் என பிஜேபியினர் கோரிக்கையெழுப்பி வருகின்றனர்.
….உங்கள் பீமா
