Tuesday, June 17, 2025
Home > செய்திகள் > கண்ணீரை வரவழைத்த சோகம்..! காங்கிரஸ் ஆட்சியில் கொடுமை..!

கண்ணீரை வரவழைத்த சோகம்..! காங்கிரஸ் ஆட்சியில் கொடுமை..!

26-3-22/11.03AM

சட்டீஸ்கர் : சட்டீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பிராமணர்களுக்கு எதிரான வன்முறை கருத்துக்களை பேசியதற்காக முதல்வரின் தந்தை மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சர்குஜா மாவட்டத்தில் ஒருவர் தனது ஏழு வயது மகளின் சடலத்தை தோளில் தூக்கிக்கொண்டு 10 கிலோமீட்டர் தூரம் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் நேற்று வைரலானது. அதைத்தொடர்ந்து துறைரீதியான விசாரணை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அமடலா கிராமத்தை சேர்ந்த ஈஸ்வர் தாஸ் என்பவர் நேற்று காலை தனது மகள் சுரேகா எனும் சிறுமியை உடல்நிலை மோசமான நிலையில் அழைத்து வந்துள்ளார்.

லக்கான்பூர் கம்யூனிட்டி மருத்துவமனைக்கு அதிகாலையில் தனது மகளை சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார். ஆனால் நேற்று காலை 7.30 மணிக்கு சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து பேசிய டாக்டர் வினோத் பார்கவ் ( ரூரல் மெடிக்கல் அசிஸ்டென்ட்) ” சிறுமியின் பெற்றோர் கூற்றுப்படி கடந்த சிலநாட்களாக பலத்த காய்ச்சலில் சிறுமி இருந்திருக்கிறார். சிறுமியை அனுமதிக்கையில் ஆக்சிஜன் லெவல் 60க்கும் கீழாக இருந்தது.

`

முதற்கட்ட அவசர சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சிறுமியின் உடல் மிக மோசமானதை தொடர்ந்து காலை 7.30க்கு அவர் உயிர் பிரிந்தது. சிறுமியின் உறவினர்கள் 9.20 மருத்துவமனையை சூழ்ந்தனர். யாரிடமும் சொல்லாமல் சிறுமியின் சடலத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர்” என கூறினார்.

சமூக வலைதளத்தில் வீடியோ வைரலானதை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ்.சிங் டியோ மாவட்ட தலைமை சுகாதாரத்துறை செயலாளரை அழைத்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளார்.

```
```

மேலும் ஆம்புலன்ஸ் வரும் வரை சிறுமியின் உறவினர்களை காத்திருக்கச் சொல்லியும் அவர்களின் சடலத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

ஏழுவயது சிறுமியின் சடலத்தை தந்தை வெறும்காலோடு தூக்கிச்சுமந்து கொண்டுபோன சம்பவம் மாநிலத்தில் சலசலப்பை உண்டுபண்ணியுள்ளது. காங்கிரசின் நிர்வாக கோளாறு என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

…..உங்கள் பீமா