Saturday, October 5, 2024
Home > அரசியல் > தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை போட்ட ஒரே ட்வீட்..! அலறும் திமுகவினர்..!

தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை போட்ட ஒரே ட்வீட்..! அலறும் திமுகவினர்..!

6-12-21/16.54pm

சென்னை: தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை போட்ட ஒரே டேவிட் திமுகவினரை பதறவைத்துள்ளது. பல்வேறு விமர்சனங்களை அவரது பதிவில் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.

தமிழக திமுக அரசு அரசுத்துறைகளுக்கு தேவையான மின்னணு பொருட்களை பலகோடிகள் கொடுத்து தனியாரிடம் இருந்து வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. அரசுத்துறைக்கு சொந்தமான ELCOT நிறுவனத்திடமிருந்து அரசுத்துறைகளுக்கு அத்தியாவசிய மின்னணு பொருட்களை வாங்கினால் விலை குறைவாகவும் தரமானதாகவும் இருக்கும். ஆனால் வாங்கிய அறுபதுநாளில் பழுதாகும் மின்னணு சாதனங்களை தனியாரிடம் வாங்கவேண்டிய அவசியம் என்ன என தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.

`

மேலும் ஆவின்துறை மூலம் இனிப்புகள் தயாரிக்கப்பட்டு கொண்டிருக்க தனியாரிடம் டெண்டர் விட்டது போல, தற்போது பள்ளிகளுக்கும் மற்ற அரசுத்துறைகளுக்கும் தேவையான மின்னணு பொருட்களை ELCOTஐ தவிர்த்து விட்டு தனியாரிடம் திமுக வாங்குகிறது என தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது ட்விட்டரில்,

```
```

“தமிழக கோபாலபுர அரசின் நிர்வாக சீர்கேட்டுக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு! தமிழக அரசு நிறுவனமான ELCOT மூலமாக எதையும் வாங்காமல் அதே பொருட்களை சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். இந்த கமிஷன் அரசு முடிவு செய்ய வேண்டும் ELCOT தேவையா, வேண்டாமா என்று” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவின் பின்னூட்டத்தில் பல திமுக ஆதரவாளர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

……உங்கள் பீமா