11-2-22/12.20pm
உத்திரபிரதேசம் : உத்திரபிரதேசத்தில் நேற்றுமுதல் சட்டமன்ற தேர்தல் ஆரம்பித்துள்ள நிலையில் 11 மாவட்டங்களில் 60.51 சதவிகித வாக்குகள் நேற்று பதிவாகியுள்ளன. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியான கோரக்பூரில் சமாஜ்வாடி பிராமண சமூகத்தை சேர்ந்த சுபவதி சுக்லா என்பவரை யோகிக்கு எதிராக களமிறக்கியிருக்கிறது.
இவர் முன்னாள் பிஜேபி தலைவர் சுக்லா என்பவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே பாணியில் காங்கிரசும் பிராமண சமூகத்தை சேர்ந்த சேத்னா பாண்டே என்பவரை யோகிக்கு எதிரான வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது. இவர் சமூக ஆர்வலர் மற்றும் கவிஞர் என காங்கிரசாரல் அழைக்கப்படுகிறார். தமிழகத்தில் மனுஷ்ய புத்திரன் மற்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் தங்களை கவிஞர் என கூறிக்கொள்வதை போல அங்கு இந்த சேத்னா பாண்டே ஆவார்.

இந்நிலையில் அலிகார் தொகுதி சர்ரா சட்டமன்ற தொகுதியில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி சார்பில் போட்டியிடும் லட்சுமி தங்கர் என்பவரின் சமீபத்திய பேட்டி ஒன்று நேற்று முதல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ச்சர்ரா பகுதியில் நேற்றுமுன்தினம் பிரச்சாரத்தில் தங்கர் ஈடுபட்டிருந்தபோது அவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்.

அதற்க்கு மிகவும் திணறி பதிலளித்த அவர் அகிலேஷ் யாதவ் எனபதன் ஆங்கில எழுத்துக்களை திணறி திணறி ஒவ்வொரு எழுத்துக்களாக சொல்லியது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இவர் எம்.ஏ.ஆங்கில பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து அகிலேஷிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது,
“அவருக்கு வேறு எந்த ஒரு அறிவும் தேவையில்லை. எங்களது சின்னமான சைக்கிள் பற்றி அறிந்திருந்தால் போதும்.ஒரு சக்கரம் ராம் மனோகர் லோஹியாவையும் ஒரு சக்கரம் அம்பேத்காரையும் குறிக்கும் என்பதை அவர் அறிந்திருந்தால் போதும்” என கூறி திராவிடத்தனமான பதிலில் திக்குமுக்காட செய்துள்ளார் அகிலேஷ்.
இந்த தங்கர் கடந்த 2021ல் சமாஜ்வாடியில் இணைந்த உடனே மூத்த தலைவர்களை ஓரம்கட்டிவிட்டு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்றாக கருதப்படுகிறது.
தாக்கூர் வாக்குவங்கியை மனதில் வைத்து இந்த லட்சுமி தங்கர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
…..உங்கள் பீமா