25-12-21/18.32pm
டெல்லி : காங்கிரஸ் ஆதரவாளர் மற்றும் பிரபல வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண் மத்திய அமைச்சர் வெளியிட்ட கருத்தை மாற்றிக்கூறி வாங்கிக் கட்டிக்கொண்டார்.
காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவாளர்கள் மத்திய பிஜேபி அரசின் திட்டங்களை மற்றும் அறிக்கைகளை மாற்றி திரித்து பொய்யாக பரப்பிவிடுவது கடந்த சில வருடங்களாக தொடர்ந்து வருகிறது. அதிலும் சமீபத்தில் ப்ரியங்கா காந்தி தனது வாரிசுகளின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது என பொதுமேடையிலேயே குற்றசாட்டை முன்வைத்தார்.
அதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையின் முதற்கட்ட அறிக்கையில் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என மத்திய நுண்ணறிவுப்பிரிவு போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். பின்னர் தற்போது அயோத்தியாவில் ஒரு தலித்தின் நிலத்தை ராமர் கோவில் கட்டுவதற்காக யோகி அரசு வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்துள்ளது என போராடி வருகிறார்.

ஆனால் அந்த நபர் நானே மனமுவந்து ராமராஜ்ஜியம் மலர எனது நிலத்தை கொடுத்தேன் என கூறியபிறகும் தனது போராட்டங்களை காங்கிரஸ் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் பிரசாந்த் பூஷண் தனது பதிவு ஒன்றில் ” தினமும் நான்கு விலையுயர்ந்த ஆடை அணியும் பிரதமர் 8000கோடி விமானத்தில் பார்ப்பவர் 8000கோடி மதிப்பிலான வீட்டில் நமது வரிப்பணத்தில் வாழ்பவருக்கு தினமும் 30 ரூபாய் வருமானத்தில் வாழ்பவரின் கஷ்டம் தெரியுமா” என குறிப்பிட்டதோடு ஒரு துணுக்கு செய்தியையும் பகிர்ந்துள்ளார்.
அந்த செய்தியில் “இந்தியா இன்னும் ஆறு முதல் எட்டு வருடங்களில் ரயில் பயணங்களை நிறுத்திவிடும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்க்கு பதிலடி கொடுத்த சிந்தியா ” தற்போது 18.5 கோடி மக்கள் ரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்து வருகின்றனர். வரும் காலத்தில் இரண்டாம் வகுப்பில் பயணிப்பவர்கள் விமானத்தில் செல்லும் அளவிற்கு 6-8 வருடங்களில் மாறிவிடும் என குறிப்பிட்டிருந்ததை ஏன் பொய்யாக திரித்து கூறுகிறீர்கள்” என பதிலடி கொடுத்துள்ளார்.
பிஜேபி தலைவர்கள் இதுவரை பதிலடி கொடுக்காமல் இருந்ததே பொய்யான தகவல்கள் பரவ காரணமாக அமைந்தது. உண்மையை மக்களிடம் இப்படி வெளிப்படையாக எடுத்துவைக்க பிஜேபியினர் முன்வரவேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறுகின்றனர்.
…..உங்கள் பீமா