Monday, June 17, 2024
Home > அரசியல் > அடங்காத அமித்ஷா..! தெலுங்கானாவை குறிவைக்கும் முதல்வர் யோகி டீம்..!

அடங்காத அமித்ஷா..! தெலுங்கானாவை குறிவைக்கும் முதல்வர் யோகி டீம்..!

14-3-22/12.07pm

தெலுங்கானா : தெலுங்கானாவில் 119 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 60 சீட்டுக்கள் தேவைப்படும் நிலையில் சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ். கட்சி 103 இடங்களை பெற்று 2018ல் ஆட்சியமைத்தது. பிஜேபி மூன்று இடங்களை மட்டுமே பெற்றது. காங்கிரஸ் ஆறு இடங்களை பெற்றிருந்தது. அசாதுதீனின் கட்சி ஆறு இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் வர இருக்கும் நிலையில் பிஜேபி தலைமை தற்போதே தேர்தலுக்கு ஆயத்தமாகியுள்ளது. தேர்தலுக்கான முன்னோட்டப்பணிகள் தற்போதே தொடங்க உள்ளது. அதன் ஒரு பகுதியாக அமித்ஷா முதல்வர் யோகி மற்றும் ஜெ.பி.நட்டா ஆகியோர் இந்த மாத இறுதியில் தெலுங்கானா வரவுள்ளனர். இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத இரண்டாம் வாரத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த தீவிர ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

`

பிஜேபி மாநில தலைவர் சஞ்சய் பண்டி தலைமையில் ஜோகுலாம்பா கோவிலில் இருந்து பிரச்சாரம் தொடங்குகிறது.இதில் யோகி அமித்ஷா மற்றும் இதர தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த முறை 80 சீட்டுக்களாவது வெல்லவேண்டும் என்ற முனைப்புடன் மாநில தலைமை செயல்பட்டு வருகிறது.

```
```

மேலும் அமித்ஷா தெலுங்கானாவில் இரண்டு நாட்கள் தங்குகிறார். அப்போது பூத் அளவிலான செயல்வீரர்களுடன் கலந்தாலோசனை நடத்தினார். மேலும் பலருடன் அமித்ஷா தொடர்பிலிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரச்சாரம் மேற்கொள்ளும் அன்று பலர் அமித்ஷா யோகி முன்னிலையில் கட்சியில் இணைவார்கள் என தெரிகிறது. மேலும் பல சிறப்புக்குழுக்கள் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகின்றன. தொகுதியில் வெற்றி வாய்ப்பை கவனத்தில் கொண்டு முன்னுரிமை கொடுக்கப்படப்போவதாக தலைமை தெரிவிக்கிறது.

…..உங்கள் பீமா