தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் அவர்களது துணைவியார் விஜயலக்ஷ்மி அவர்கள் மாரடைப்பால் அகால மரணமடைந்தார். இதுகுறித்து அறிந்த அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
பிஜேபி மாநில தலைவர் கே அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் @AIADMKOfficial ஒருங்கிணைப்பாளருமான அண்ணன்
@OfficeOfOPS அவர்களின் துணைவியார் விஜயலட்சுமி அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்தினேன். அவர்களின் ஆன்மா இறை நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் “சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அண்ணன்
@OfficeOfOPS அவர்களின் துணைவியார் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்” என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி கவர்னர் திருமதி.தமிழிசை சௌந்தர ராஜன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழக முன்னாள் முதலமைச்சரும்,தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி திருமதி.விஜயலட்சுமி அவர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அண்ணன் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும்,அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ரவீந்திரநாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு சகோதரியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்”. என பதிவிட்டுள்ளார்.