Saturday, April 1, 2023
Home > செய்திகள் > நீட் தேர்வு தோல்வி..! மீண்டும் ஒரு மாணவி தற்கொலை..!

நீட் தேர்வு தோல்வி..! மீண்டும் ஒரு மாணவி தற்கொலை..!

24-12-21/16.18pm

நீலகிரி : நீட் தேர்வு குறித்த அச்சத்தை போக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்காத வரையில் தமிழக மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என பெற்றோர்கள் சங்கம் வேதனை தெரிவித்திருக்கிறது.

கடத்த சில மாதங்களாக பள்ளி சிறுவர் சிறுமியர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்படுத்தப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதை தடுக்க காவல்துறையும் தமிழக அரசும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனிடையே நீட் தேர்வின் அச்சம் காரணமாக தமிழகத்தில் சில மான மாணவியர்கள் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்பத்தியிருந்தது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் தோல்வியுற்றதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பரில் நடந்த நீட் தேர்வில் தோல்வியுற்ற அந்த மாணவி யாரிடமும் பேசாமல் மனஉளைச்சலிலேயே இருந்துள்ளார். மாணவியிடம் பெற்றோர் கேட்கையில் சரிவர பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

`

மாணவியின் மனநிலையை உணர்ந்த பெற்றோர் திருப்பூரில் இருக்கும் அவர்களது உறவினர்கள் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். பின்னர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில நாட்களிலேயே வீட்டிற்கு திரும்பியுள்ளார் மாணவி. அப்போதும் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். கடந்த சனிக்கிழமை டிசம்பர் 18 அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை காப்பாற்றிய குடும்பத்தினர் மேட்டுப்பாளையத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஐந்து நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்த அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவி எழுதியிருந்த தற்கொலை கடிதத்தில் ” மகிழ்ச்சியாக இருப்பது போல நடிக்கமுடியவில்லை” என குறிப்பிட்டுள்ளார். இதை படித்த பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத்த காட்சி மேட்டுப்பாளையத்தில் இருந்த மக்களை பதற செய்துள்ளது.

…..உங்கள் பீமா