21-2-22/11.10am
சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடிதடிகள், ஆபாச பேச்சுக்கள், பூத்தை கைப்பற்ற முயற்சி, வேட்பாளர் தாக்குதல், மிரட்டல் என கோலாகலமாக சனிக்கிழமை முடிந்தேறியது. திமுகவினர் பல இடங்களில் போலீசாரை ஒருமையில் பேசியும் தகாத வார்த்தைகளில் திட்டியும் தேர்தலை சிறப்பாக முடித்து வைத்தனர் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
சேப்பாக்கம் பகுதியில் வாக்குசாவடியில் அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுபட்ட திமுகவினரை பெண் காவலர் ஒருவர் படம்பிடித்தார். அவரை ஒருமையில் தகாத வார்த்தைகளில் பேசி செல்போனை பிடுங்கிய சம்பவம் அரங்கேறியது. மேலும் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரேபோலீசாரை மிரட்டும் காட்சியும் செய்திகளில் வெளியாகியிருந்தது.
ஆனால் இதுவரை எந்த ஒரு வழக்கும் பதியப்பட்டதாக தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துமீறி நடந்ததாக அதிமுக மற்றும் பிஜேபியினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை ஒரு பதிவிட்டுள்ளார். அதில் “திமுக அரசு தேர்தல் நாளன்று எதுவும் நடக்கவில்லை என்று கூறுகின்றார்கள்.
இந்த காணொளி தமிழகத்திலே எந்த அளவிற்கு ஆளும் கட்சி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயகத்தை நசுக்கி இருக்கிறார்கள் என்பது தெரியும். தேர்தல் ஆணையம் தனது கண்களை மூடிக்கொள்ளாமல் நாளையாவது விழிப்புடன் இருப்பார்களா” என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் சில வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார்.
…..உங்கள் பீமா