18-12-21/13.25pm
உத்திரபிரதேசம் : பெண்களுக்கான திருமண வயது இனி 21 என மசோதா தாக்கல் செய்து மத்திய அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கு இருந்த அகலாத தடையை நீக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்திய மக்களிடம் மோடி அவர்களின் இந்த அறிவிப்பு பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயத்தில் இஸ்லாமிய தலைவர்கள் பலர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து ஒவைசி கூறுகையில் ” ஒரு பிரதமரை தேர்ந்தெடுக்க ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க 18 வயதே போதும் என சட்டம் இருக்கையில் திருமணம் செய்ய 21 வயது பூர்த்தியாகவேண்டும் என சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று” என குறிப்பிட்டார்.
இதே ஒவைசி உத்திரபிரதேச இஸ்லாமிய மக்களிடம் பேசுகையில் ” இஸ்லாமிய இளைஞர்கள் பிரம்மச்சாரியாக இருக்க கூடாது. விரைவில் திருமணம் முடிக்க வேண்டும். சந்ததியை பெருக்க வேண்டும். அப்போது தான் நம் சமுதாயம் மேலெழும்ப முடியும்” என இனப்பெருக்கம் பற்றி குறிப்பிட்ட சமுதாயத்தின் மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டு பேசியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தேசிய ஆங்கில ஊடகம் ஒன்றின் நேரலையில் பேசிய சமாஜ்வாடி தலைவர் அபு அசாமி ” 16 வயது ஆன மகளுடன் தனிமையில் இருக்க முடியாது. மனதில் சாத்தான் குடிகொண்டுவிடும்” என கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். மேலும் அதே கட்சியை சேர்ந்த எம்பி ஹாசன் கூறுகையில் ” பெண்கள் பூப்படைந்ததுமே திருமணத்திற்கு தயாராகி விடுகிறார்கள். அவர்கள் 16 வயதில் திருமணம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது” என அதிரடி பதில் அளித்துள்ளார்.
….உங்கள் பீமா