Friday, March 24, 2023
Home > செய்திகள் > சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..! கோவில் நிதியில் கல்லூரிகள் கட்ட தடை..!

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..! கோவில் நிதியில் கல்லூரிகள் கட்ட தடை..!

15-11-21/13.35pm

சென்னை : இந்துக்களின் கோவில் நிதியில் கோவில் நிலங்களில் கல்லூரிகள் எழுப்ப திமுக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதற்க்கான பணிகளும் வெகு வேகமாக முடுக்கிவிடப்பட்டது.

திமுக அரசின் இந்த முடிவை எதிர்த்து TR ரமேஷ் என்பவர் தொடுத்த வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கோவில் நிதியில் இதுவரை நான்கு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பல கல்லூரிகள் தொடங்கப்படவிருப்பதாக திமுக அரசு தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு பக்தகோடிகளை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 1500 கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதற்க்கான நிதி தமிழத்தில் உள்ள பத்துகோவில்களில் இருந்து பெறப்படும் என HRCE தெரிவித்திருந்தது. இதன் முதல் பகுதியாக உயர்கல்வித்துறை ஆணையர் அக்டோபர் 6 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் நான்கு கல்லூரிகள் ஆரம்பிக்க உத்தரவிட்டிருந்தார்.

`

பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் நிதியிலிருந்து ஒரு கல்லூரி சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியிலிருந்து கொளத்தூரில் ஒரு கல்லூரி, திருச்செங்கோடு கோவில் நிதியிலிருந்து பரமத்தி வேலூரில் ஒரு கல்லூரி மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவில் நிதியிலிருந்து விளாத்திகுளம் பகுதியில் ஒரு கல்லூரி என மொத்தமாக நான்கு கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இது குறித்த தீர்ப்பில் ” மாநில அரசுக்கு கோவில் நிதியை பயன்படுத்த எந் ஒரு அதிகாரமும் இல்லை. கோவில்களின் அறங்காவலர்களுக்கு மட்டுமே அந்த உரிமை உண்டு. இனி எந்த கோவிலின் நிதியையும் மாநில அரசு பயன்படுத்த கூடாது. ஏற்கனவே தொடங்கப்பட்ட கல்லூரிகள் பழைய விதிமுறையின்படியே தொடரும்” என தீர்ப்பளித்துள்ளது.

மேலும் மனுதாரர் ரமேஷ் குறிப்பிட்ட மனுவில் சுமார் 20000கோவில்களில் அறங்காவலர்கள் இல்லை என்றும் முதலமைச்சரின் தொகுதி கொளத்தூர். அங்கு அவசரம் அவசரமாக கல்லூரி எழுப்பப்பட்டது எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த தீர்ப்பு இந்துக்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

அறங்காவலர் விஷயத்தில் திமுக எதுவும் நாடகமாடுகிறதா என இந்து அமைப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.

……உங்கள் பீமா