Friday, March 29, 2024
Home > செய்திகள் > வாட்சப் பதிவு..! காவல்நிலையத்தின் மீது கொடூர தாக்குதல்..!

வாட்சப் பதிவு..! காவல்நிலையத்தின் மீது கொடூர தாக்குதல்..!

18-4-22/15.32PM

கர்நாடகா : கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்ட ஸ்ரீராம நவமி மற்றும் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட ஹனுமான் ஜெயந்தியை ஒட்டி சில சிறுபான்மையின அடிப்படைவாதிகள் வன்முறையில் ஈடுப்பட்டனர். அவர்களை அடையாளம் கண்ட காவல்துறை தொடர் கைதில் ஈடுப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் ஹுப்ளி ஹோஸ்பேட் பகுதியில் ஒரு இளைஞர் சிறுபான்மையினருக்கு எதிராக வாட்சப்பில் ஒரு புகைப்படம் பதிவிட்டதாக கூறி சில சிறுபான்மையினர் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து அந்த இளைஞர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இந்த தகவலறிந்த அடிப்படைவாத சிறுபான்மையினர் கும்பல் காவல்நிலையத்தை சுற்றிவளைத்தது.

நூற்றுக்கும் அதிகமானோர் கொண்ட அந்த கும்பல் அங்கிருந்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது சரமாரியாக கற்களை வீசியெறிந்தது. மேலும் அங்கிருந்த போலீஸ் வாகனங்களுக்கு தீவைத்து வேடிக்கை பார்த்தது அந்த கும்பல். இந்த தாக்குதல் ஆய்வாளர் உட்பட சில காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டு தடியடி நடத்திய கலவரக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

`

சனிக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியதை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர். சிசிடிவி மூலம் கலவரக்காரர்கள் 40 பேரை அடையாளம் கண்ட போலீசார் இன்று அவர்களை கைது செய்தனர். இதுகுறித்து முதல்வர் பொம்மை கூறுகையில் ” சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் யார் நடந்து கொண்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்க்கு மதச்சாயம் பூசுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என கூறினார்.

```
```

சனிக்கிழமை 9.30க்கு கூடிய அந்த கும்பல் நள்ளிரவுநேரம் தாக்குதலை ஆரம்பித்ததாகவும் பழைய ஹுப்ளி காவல்நிலையத்தின் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அந்த கும்பல் நள்ளிரவில் கல்லெறிந்ததாகவும் ஹுப்ளி போல்ஸ் கமிஷனர் லபு ராம் தெரிவித்தார்.

….உங்கள் பீமா