Friday, February 7, 2025
Home > செய்திகள் > லண்டன் டூ இந்தியா..! ரேஸ் பைக்கில் மாஸ் காட்டும் ஸத்குரு ஜக்கிவாசுதேவ்..!

லண்டன் டூ இந்தியா..! ரேஸ் பைக்கில் மாஸ் காட்டும் ஸத்குரு ஜக்கிவாசுதேவ்..!

22-3-22/16.10pm

லண்டன் : ஹிந்து துறவிகளில் பக்தர்களால் பெரிதும் பின்தொடரப்படும் நிகழ்கால துறவி சத்குரு ஜக்கிவாசுதேவ். இவரது ஆன்மிக சொற்பொழிவுகள் இயற்கை சார்ந்தே இருக்கும். இவர் ஒரு தீவிர மோட்டார்சைக்கிள் பிரியர் என்பது கூடுதல் தகவல்.

கடந்த திங்களன்று லண்டனிலிருந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். SAVE SOIL எனும் விழிப்புணர்வுக்காக யூரோப் மிடில் ஈஸ்ட் நாடுகள் வழியாக 30000 கிலோமீட்டர்கள் 100 நாட்கள் மோட்டார்சைக்கிளில் பிரச்சாரம் தொடங்கியுள்ளது. சுவாமிகள் இந்த நூறு நாட்களில் சுற்றுசூழல் ஆர்வலர்கள் அணைத்து நாட்டிலும் உள்ள தன்னார்வலர்களை சந்திக்க உள்ளார்.

UN அறிக்கையின் படி உலகில் மூன்றில் ஒரு பங்கு மண் மலட்டுத்தன்மையாகிவிட்டது. 2050 இல் 90 சதவீதம் மண் மலடாகிவிடும். சில சென்டிமீட்டர் நிலம் நன்னிலமாக மாற ஆயிரம் வருடம் தேவைப்படும். மண் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவே இந்த பிரச்சாரம் என சுவாமிகள் தெரிவித்தார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

`

“நான் ஒரு விஞ்ஞானி இல்லை. நான் சுற்றுப்புற சூழல் ஆர்வலரும் இல்லை. நான் இந்த மண்ணிற்க்கானவன். ஆய்வகத்திற்கு சொந்தமானவன் இல்லை. ஆனால் இந்த மண்ணிற்கு பிரச்சினை என தெரியும். அதனால் மாநிலங்களின் தலைவர்கள் மூத்த தலைவர்கள் தன்னார்வலர்களுடன் பேச உள்ளேன். நாங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு எதிரானவர்கள் இல்லை. அவற்றை கட்டுப்படுத்த சட்டம் வேண்டும்.

இயற்கை உரத்தை பயன்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு வர” என தெரிவித்தார். மேலும் பயணத்தில் பலநாடுகளின் தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வேண்டும்.

```
```
Three hrs ago

சத்குரு அவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம் பலநாடுகளில் வரவேற்பைப் பெற்றதோடு ஐ.நா.

…..உங்கள் பீமா