Wednesday, May 20, 2026
Home > செய்திகள் > லவ் ஜிஹாத் சர்ச்சை..! கோர்ட் பரபரப்பு உத்தரவு..!

லவ் ஜிஹாத் சர்ச்சை..! கோர்ட் பரபரப்பு உத்தரவு..!

18-4-22/16.28PM

கேரளா : ஹிந்து மற்றும் கிறித்தவப்பெண்களை இஸ்லாமிய ஆண்கள் காதலித்து மதம் மாற்றுவதாக நாடெங்கும் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இதை அரசியல் கட்சிகள் மறுத்தாலும் கேரளாவில் பிஷப் உட்பட பலர் இந்த கூற்றை வலுப்படுத்துகின்றனர்.

இந்நிலையில் ஜோஸ்னா மேரி ஜோசப் என்பவரை உள்ளூர் DYFI தலைவர் செஜின் என்பவர் துபாயில் வைத்து காதலித்து திருமணம் முடித்து அவரை மதம் மாற்றியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சிபிஐஎம் மாவட்ட செயலாளர் ஜார்ஜ்.எம்.தாமஸ் என்பவர் இது லவ்ஜிஹாத் தான் என அறிக்கை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து அரசியலில் பரபரப்பான சூழல் உருவானது.

இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் தகப்பனார் ஜோசப் உயர்நீதிமன்றத்தை நாடினார். தனது மகளை மீட்டுத்தருமாறு ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது மகள் வீட்டைவிட்டு வெளியேறிய நாளிலிருந்து யாரிடமும் பேசவில்லையென்றும் மாப்பிள்ளை மகளை தடுப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் செய்தியாளர்களை சந்தித்த ஜோசப்,

“கேரள காவல்துறையால் என் மகளை என்னிடம் அழைத்து வர முடியவில்லை. காவல்துறை மீது நம்பிக்கை இல்லை. உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைக்கு முடிவெடுப்பேன்” என தெரிவித்தார்.

இன்று ஜோசப்பின் மனுவை விசாரித்த நீதிபதிகள் மேரி ஜோசப்பை வருகிற செவ்வாய்கிழமைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

இதனிடையே தான் விருப்பப்பட்டு தான் செஜினுடன் சென்றிருப்பதாக மேரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூறுகையில் இது வலதுசாரிகள் கூறும் சொல். லவ் ஜிஹாத் கேரளாவில் ஒருபோதும் கிடையாது என தெரிவிக்கின்றனர்.

…..உங்கள் பீமா