கடந்த மாதம் அஸ்ஸாம் மிசோராம் இடையே எல்லையில் நடந்த மோதலில் அஸ்ஸாமை சேர்ந்த ஆறு காவல்துறையினர் மிசோராம் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதையடுத்து எல்லைப்பகுதியில் பதட்டம் நிலவி வந்தது.
அஸ்ஸாமில் போதைபொருள் கடத்தல் மற்றும் விபசாரத்துக்காக பெண்கள் கடத்தப்படுத்தல் மற்றும் எல்லைகளில் ஊடுருவல் என சமூக குற்றங்கள் அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசு பல வகையில் முயன்று வருகிறது.
பிஜேபி தலைமையிலான ஹிமந்தா பிஸ்வா அரசு சட்டங்களை கடுமையாகியிருக்கிறது. பல மாபியாக்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றன. பல் பெண்கள் விபசார கும்பலிடமிருந்து மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் திடீரென அஸ்ஸாம் அரசு மாநிலம் முழுவதும் பதட்டமான பகுதி என அறிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. 28-9-21 முதல் அடுத்த ஆறுமாதங்களுக்கு இந்த அவசர நிலை பிரகடனம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரம் 1958 பிரிவு 3 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களின் படி வரும் ஆறு மாதங்களுக்கு அசாம் மாநிலம் முழுவதும் பதட்டமான பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது”. என அஸ்ஸாமில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
மேலும் விவரங்கள் மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
..உங்கள் பீமா