Saturday, July 27, 2024
Home > செய்திகள் > வெள்ளத்தில் மிதக்கும் சென்னை..! பரிதவிக்கும் மக்கள்..! களத்தில் துப்புரவு பணியாளர்கள்..!

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை..! பரிதவிக்கும் மக்கள்..! களத்தில் துப்புரவு பணியாளர்கள்..!

7-11-21/ 12.00pm

நேற்று இரவுமுதல் பெய்து வரும் கனமழையால் சென்னை முழுவதும் மழைநீரால் சூழப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சென்னையின் முக்கிய பகுதிகளான டி நகர் வேளச்சேரி தாம்பரம் மற்றும் எழும்பூர் வடசென்னை ஆகிய பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. நேற்றிரவு முதல் சென்னை மற்றும் அதன்சுற்று வட்டாரங்களில் கனமழை கொட்டித்தீர்க்கிறது. சில இடங்களில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மோட்டார் வைத்து வெள்ளநீரை அகற்றி வருகின்றனர்.

`

பொதுப்போக்குவரத்து இதுவரை நிறுத்தப்படவில்லை எனினும் மக்கள் பத்திரமாக இருக்கும்படி தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. பூண்டி அணை வேகமாக நிரம்பி வருவதால் ஆணை திறக்கப்பட போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மெரினா பகுதியில் கடல் நீர் அதிகரித்து காணப்படுகிறது. அங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மக்கள் கடல்பகுதிக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவசர மற்றும் உதவி அழைப்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

```
```

தமிழக அரசு கடந்த அதிமுக ஆட்சியை போல சுதாரித்துக் கொண்டு விழிப்புடன் செயல்பட்டால் எந்த ஒரு பாதிப்புமின்றி தப்பலாம் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

……உங்கள் பீமா