7-3-22/13.14pm
தெலுங்கானா : தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி செய்துவருகிறது. கடந்த நகர்ப்புற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ் கோட்டை என அழைக்கப்படும் பகுதிகளில் தனது வரலாற்று வெற்றியை பதிவு செய்திருந்தது பிஜேபி.
மேலும் அரசுபள்ளிகளின் ஆசிரியர் ஆசிரியைகளை முன்னறிவிப்பின்றி இடமாறுதல் செய்தது தெலுங்கானா மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதுவும் பழங்குடியின ஆசிரியர்களை மட்டுமே பழிவாங்குவதாக பெரும்போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பிஜேபி மாநில தலைவர் சஞ்சய் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று தெலுங்கானா மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் ஆளுநர் உரை அவசியமற்றது என சந்திரசேகர் ராவ் அரசு கருதியது. இதை எதிர்த்து பிஜேபி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்தினர். அதைத்தொடந்து டி.ஆர்.எஸ் இன் அமைச்சரான தலசானி ஸ்ரீனிவாஸ் பிஜேபி எம்.எல்.ஏக்களை இடைநீக்கம் செய்ய சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தார்.
அதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும்வரை பிஜேபி எம்.எல்.ஏக்கள் ராஜா சிங், ரகுநந்தன் ராவ், எட்டலை ராஜேந்தர் ஆகிய மூன்றுபேர்இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பிஜேபி எம்.எல்.ஏக்கள் மற்றும் மாநில தலைமை கடும் கண்டனங்களை பதிவுசெய்துள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த கூட்டத்தொடரின் தொடர்ச்சி என கருதப்படுவதால் ஆளுநர் உரை தேவையில்லை என மாநில அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் கவர்னர் மாளிகை தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூட்டத்தொடரின் நீட்சியாக இருந்தாலும் பல மாதங்கள் கழித்து நடைபெறும் கூட்டம் என்பதால் புதிய கூட்டத்தொடராகவே கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் போல தெலுங்கானாவிலும் பிஜேபி அசுர வளர்ச்சி பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
…..உங்கள் பீமா