Tuesday, October 15, 2024
Home > அரசியல் > அனல் பறக்கும் அரசியல்..! திமுக பாணியை கையிலெடுத்த தமிழக பிஜேபி…! விழிபிதுங்கும் திமுக தலைமை…!

அனல் பறக்கும் அரசியல்..! திமுக பாணியை கையிலெடுத்த தமிழக பிஜேபி…! விழிபிதுங்கும் திமுக தலைமை…!

17-11-21/ 16.40pm

சென்னை ; தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையின் அடுத்தடுத்த அதிரடியில் தமிழக அரசியல் அனல் பறக்கிறது. அண்ணாமலை அவர்கள் திமுக பாணியை கையாள்வது திமுக தலைமையை விழிபிதுங்க வைத்திருக்கிறது.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக சரியாக கையாளவில்லை என தமிழக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றசாட்டை எழுப்பிவரும் நிலையில் அடுத்த புயலுக்கு சென்னை தாங்குமா என சென்னை மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். 18-11-21 மற்றும் 19-11-21 இரண்டு நாட்கள் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் திமுக அரசின் மெத்தனப்போக்கால் கடந்த மழைக்கு சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இது குறித்து கிருஷ்ண குமார் எனும் பொருளாதார ஆய்வாளர் கூறுகையில் ” கடந்த மாதம் 28ஆம் தேதி 150 பொறியாளர்களை பணியிடை மாற்றம் செய்தது சென்னை மாநகராட்சி.

`

பருவ மழை பொழிவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு இத்தகைய முடிவால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகள் பாதிக்கும் என்று கூடவா அரசுக்குத் தெரியாது” என கேள்வியெழுப்பினார். மேலும் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது அறிக்கையில், விவசாய நண்பர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளித்து இருக்கும் நம்முடைய முதலமைச்சருக்கு நன்றி.

அதே சமயத்தில் அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, நிவர் புயல் சமயத்தில் கோரிய 30 ஆயிரம் ரூபாயை ஒரு ஹெக்டேருக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.” என தெரிவித்திருக்கிறார். இதனிடையே விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 5000 வழங்கவேண்டும் என அண்ணாமலை போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருப்பது திமுகவுக்கு சிக்கலை உண்டுபண்ணியுள்ளது.

```
```

திமுக எதிர்கட்சியாய் இருக்கும் போது ஒவ்வொரு விஷயத்திற்கும் போராட்டத்தை முன்னெடுக்கும். இதே பாணியை தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கையிலெடுத்திருக்கிறார். ஆனால் அண்ணாமலை மக்கள் நலனுக்காகவே போராட்டத்தை முன்னெடுக்கிறார் என பிஜேபியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

…..உங்கள் பீமா

திமுக பற்றிய செய்திகளை மேலும் அறிய subscribe www.madrastelegram.com