Saturday, July 27, 2024
Home > செய்திகள் > அடடா.. பூஜா குமாருக்கு இப்படி ஆகி போச்சே..! கலக்கத்தில் கமலஹாசன்..!

அடடா.. பூஜா குமாருக்கு இப்படி ஆகி போச்சே..! கலக்கத்தில் கமலஹாசன்..!

24-11-21/6.24am

சென்னை : அடடா பூஜா குமாருக்கும் இப்படி ஆகிப்போச்சே என கமலஹாசன் வருத்தத்தில் இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் யூரோப் கண்டங்களில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்திருக்கிறது. யூரோப்பில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மரண எண்ணிக்கைகள் அதிகரித்துவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே போல அமெரிக்காவிலும் கொரோனா மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. அங்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மக்கள் நீதிமய்யம் நிறுவனர் மற்றும் நடிகர் கமலஹாசன் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு தனது நட்புவட்டாரங்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. மேலும் நியூயார்க்கில் வசிக்கும் பூஜாகுமாரையும் சந்தித்ததாக கிசுகிசுக்கப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து கடந்த 22ம் தேதி சென்னை திரும்பிய அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

`

அதுகுறித்து கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.

```
```

அதே போல நடிகை பூஜாகுமார் தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

…..உங்கள் பீமா