Thursday, March 28, 2024
Home > செய்திகள் > பிரதமரை இழிவு படுத்தும் வகையில் கிட்ஸ் ஷோ..! நடவடிக்கை எடுப்பாரா எல்.முருகன்..?

பிரதமரை இழிவு படுத்தும் வகையில் கிட்ஸ் ஷோ..! நடவடிக்கை எடுப்பாரா எல்.முருகன்..?

16-1-22/18.00pm

சென்னை : இந்திய பிரதமரை அவதூறாக பேசுவது மட்டுமல்லாமல் அருவருக்கத்தக்க வகையில் பேசி மகிழ்வது வாடிக்கையாகி வருகிறது. அது தற்போது சிறுவர்களுக்காக நடத்தப்படும் கிட்ஸ் ஷோவிலும் திணிக்கப்பட்டிருப்பது பலரை அதிர்ச்சிக்குளாகியிருக்கிறது.

பாரத பிரதமர் மோடி 2014 ல் நடந்த தேர்தலின் போது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் பணம் செலுத்தும் அளவிற்கு கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கிறது என கூறியிருந்தார். இந்த வார்த்தையை அப்படியே திரித்து மோடி ஆட்சிக்கு வந்தவுடன் 15 லட்சம் மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்போகிறார் என எதிர்க்கட்சிகள் வதந்தியை பரப்பின.

ஹிந்தி தெரியாத மாநிலமான தமிழ்நாட்டில் இந்த தவறான திரிபு வார்த்தை தமிழகத்தின் கடைக்கோடி மக்களிடமும் எதிர்கட்சியினரால் கொண்டு செல்லப்பட்டது. அதையே மக்கள் நம்பி மோடி வெறுப்பு அரசியல் துளிர்விட ஆரம்பித்தது. மேலும் மோடி பதவியேற்றபோது நான் நாட்டின் நன்மைக்காக மக்களுக்கு மருந்து கொடுக்கோபோகிறேன் என அது கசப்பாக இருக்கும். நாட்டின் வளர்ச்சி கருதி அதை மக்கள் மன்னிக்கவேண்டும் என கூறியிருந்தார்.

`

அதன்பிறகே பணமதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் வங்கி ஊழியர்கள் மேலாளர்கள் என பலரை பயன்படுத்தி தங்கள் நோட்டுக்களை பல அரசியல்வாதிகள் மாற்றிக்கொண்டதாக செய்திகளில் வெளிவந்திருந்தது. பல மக்களுக்கு கமிஷன் கொடுத்தும் நோட்டுக்களை மாற்றியதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் பணமதிப்பிழப்பு மற்றும் 15 லட்சம் என இரு விஷயங்களை கொண்டு எதிர்க்கட்சிகள் மக்களை மூளை சலவை செய்ய ஆரம்பித்தன. இதன் ஒரு பகுதியாக ஜீ தமிழ் எனும் தொலைக்காட்சியில் நடந்துவரும் கிட்ஸ் ஷோவில் சிறு குழந்தைகள் இருவர் பிரதமர் மோடியை முட்டாள் என்றும் ஊர் சுற்றுபவன் என்றும் பேசும் வகையில் ஒரு நிகழ்ச்சியை வடிவமைத்து ஒளிபரப்பியிருக்கிறார்கள்.

```
```

இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கையெழுப்பி வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என பிஜேபியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

…..உங்கள் பீமா