Saturday, July 27, 2024
Home > செய்திகள் > இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த 38 பேருக்கு மரண தண்டனை..! சிறப்பு நீதிமன்றம் அதிரடி..!

இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த 38 பேருக்கு மரண தண்டனை..! சிறப்பு நீதிமன்றம் அதிரடி..!

18-2-22/12.50pm

அஹமதாபாத் : அஹமதாபாத் 2008 வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த 49 பேரில் 38 பேருக்கு மரணதண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The Prime Minister, Dr. Manmohan Singh meets bomb blast victims at Civil Hospital in Ahmadabad on July 28, 2008..The Chief Minister of Gujarat, Shri Narendra Modi is also seen.

கடந்த 2008 ஜூலை 26 அன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அரசு மருத்துவமனை கார்ப்பரேஷன் மருத்துவமனைகள், பேருந்துகள், சைக்கிள்கள் கார்கள் உள்ளிட்ட 22 இடங்களில் ஒரு மணி நேரம் 10 நிமிடங்களுக்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

இதில் 56 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இருநூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கரோலா பகுதியில் ஒரு வெடிகுண்டு செயலிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த வெடிகுண்டு நிகழ்வுக்கு தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய மாணவ அமைப்பான சிமி இயக்கத்தின் ஒரு பிரிவான இந்தியன் முஜாஹிதீன் பொறுப்பேற்றுக்கொண்டது.

`

மேலும் குஜராத் கலவரத்திற்கு பழிதீர்க்க இந்த செயலில் ஈடுபட்டதாகவும் கூறியது.

இந்த வழக்கு குஜராத் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 13 வருடமாக நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக 78பேர் சேர்க்கப்பட்டிருந்தனர். இதில் அயாஸ் செய்யத் என்பவன் அப்ரூவர் ஆனான்.

```
```

இந்தவழக்கை விசாரித்த நீதிபதி படேல் 28 பேரை விடுதலை செய்தார்.

மேலும் குற்றவாளிகள் 48 பேருக்கும் தலா 2.85 லட்சம் அபராதமும் 38 பேருக்கு மரணதண்டனையும் 11 பேருக்கு ஆயுள்தண்டனையும் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாயும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 50000 ரூபாயும் சிறிய அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25000 வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

……உங்கள் பீமா