Friday, March 29, 2024
Home > செய்திகள் > பெண்ணுக்கு மிரட்டல்..! சர்ச்சையில் சிக்கிய உதயநிதி ஸ்டாலின் பி.ஏ..?

பெண்ணுக்கு மிரட்டல்..! சர்ச்சையில் சிக்கிய உதயநிதி ஸ்டாலின் பி.ஏ..?

09-01-22/16.00pm

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் உதயநிதி ஸ்டாலின் உதவியாளர் என கூறி பல லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக சென்னையை சேர்ந்த ஒருவர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் பகுதியை சேர்ந்த காசி என்பவரது மகள் தேன்மொழி. இவர் எம்.எஸ்.டபிள்யூ பட்டதாரி. 2017ல் படிப்பை முடித்த அவர் சென்னையில் உள்ள பிரபலமான ஒரு ஹோட்டலில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். அங்கே ராஜேஷ் எனும் நபர் அறிமுகமாகியிருக்கிறார். அதன்பின்னர் திருமணமாகி சொந்த ஊருக்கே திரும்பியுள்ளார்.

இந்நிலையில் 2018ல் அவரை தொடர்புகொண்ட ராஜேஷ். தற்போது உதயநிதி ஸ்டாலின் உதவியாளராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சில லட்சங்களை அந்த பெண்ணிடம் கறந்துள்ளார். மூன்று ஆண்டுகள் ஆகியும் வேலை வாங்கி தராத காரணத்தால் குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்திருக்கின்றனர். அதன்பிறகு தற்போது தான் ஆட்சி அமைந்திருக்கிறது. சீக்கிரமாக வேலை கிடைத்துவிடும் என கூறியிருக்கிறார்.

`

ராஜேஷின் பேச்சில் சந்தேகம் எழவே அவனை தேடி சென்னை வந்திருக்கின்றனர். முதலில் பெரும்பாக்கம் பகுதி விலாசத்தை கொடுத்திருக்கிறான். அங்கெ சென்ற போது தவறான விலாசம் என தெரியவந்துள்ளது. அதையடுத்து வேளச்சேரி விலாசம் கொடுக்க அதுவும் போலியான முகவரி என தெரியவந்ததையடுத்தது ஊருக்கு திரும்பி சென்றுள்ளனர்.

மேலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தேன்மொழியை கொலை செய்வதாக மிரட்டியுள்ளான். மேலும் தான் ஆளும்கட்சியை சேர்ந்தவன். உதயநிதி உதவியாளர். என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என கூறியிருக்கிறான். இதையடுத்து திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் சில மாதங்களுக்கு முன்னர் புகார் ஒன்றை அளித்தார் தேன்மொழி.

```
```

அதையடுத்து ராஜேஷை திருப்பத்தூர் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் உதயநிதி நேர்முக உதவியாளர் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த விவாகரத்தில் இரண்டு மாதகாலம் அவகாசம் எடுத்து தாமதமாக கைதுசெய்ய வேண்டிய நோக்கம் என்ன என்பதை அரசு விளக்க வேண்டும் எனவும் போலீசார் இந்த விஷயத்தில் நேர்மையான முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

…..உங்கள் பீமா