புதுதில்லி : உருவகப்படுத்தி புனையப்பட்ட கதைகளை அள்ளிவீசுவதில் கெட்டிக்காரர்கள் காங்கிரஸ்காரர்கள் என டெல்லி பிஜேபியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி லோக்சபா காங்கிரஸ் எம்பியான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி டெல்லி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
ஆதிர் ரஞ்சன் தனது ட்விட்டரில் ராஜீவகாந்தி கூறிய “பெரிய மரம் விழுந்தால் நிலமே அதிரும்” என மேற்கோள் காட்டி ஒருபதிவிட்டிருந்தார். பின்னர் அதை நீக்கிவிட்டார். அதையடுத்து தனது ட்விட்டர் கணக்கை யாரோ முடக்கிவிட்டதாக காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இந்திராகாந்தி கொல்லப்பட்டதையொட்டி 1984ல் நடத்தப்பட்ட சீக்கிய படுகொலையை குறிப்பிட்டு ராஜிவ்காந்தி ஒரு பெரிய மரம் விழுந்தால் நிலமே அதிரும்” என கூறியிருந்தார். அதை தற்போது தனது ட்விட்டரில் ஆதிர் பதிவிட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சர்ச்சை கிளம்பியதால் தனது கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டதாக நாடகமாடுகிறார் என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆதிர் ரஞ்சன் புகாரளிக்க செல்லுகையில் தனது செல்போனை கொண்டுசெல்லவில்லை. அதை தங்களிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு காவல்துறை ஆதிர் ரஞ்சன் சௌத்ரியை கேட்டுக்கொண்டுள்ளது. அந்த போன் ஒப்படைக்கப்பட்டால் உண்மை வெளிவந்துவிடும் என டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.