Thursday, March 28, 2024
Home > செய்திகள் > பள்ளியில் தொழுகை செய்ய மறுத்த இந்து சிறுமி பெற்றோர் மீது பாய்ந்த வழக்கு..!?

பள்ளியில் தொழுகை செய்ய மறுத்த இந்து சிறுமி பெற்றோர் மீது பாய்ந்த வழக்கு..!?

09-01-2022/11.45am

பெங்களுர் : பள்ளியில் தொழுகை செய்ய சொல்லி மாணவ மாணவியரை கட்டாயப்படுத்தியதாக கணித ஆசிரியர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீடியோ வெளியிட்ட பெற்றோர் மற்றும் சிறுமி மீது பள்ளி நிர்வாகம் வழக்கு தொடுத்துள்ளது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

பெங்களூரு BTM பகுதியில் அமைந்துள்ளது பிரபலமான ஆர்ச்சிட் இன்டர்நெஷனல் ஸ்கூல். இதன் கிளைகள் ஹைதராபாத் மற்றும் மும்பையில் அமைந்துள்ளது. இங்கு கடந்த இருநாட்களுக்கு முன் ஒரு சிறுமி கணக்கு சரிவர செய்யவில்லை என்கிற காரணத்தால் அந்த சிறுமியை அல்லாஹ்விடம் மன்னிப்புக்கேள் என கூறி கணித ஆசிரியர் தொழுகை நடத்த வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அந்த இரண்டாம் வகுப்பு மாணவி தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இதனால் கொந்தளித்த சிறுமியின் தந்தை விக்ரம் சிம்ஹா இதுபற்றிய காணொளி ஒன்றை சிறுமியை பேசவைத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதனால் இணையத்தில் இந்த வீடியோ வைரலாக ஆரம்பித்தது. அந்த வீடியோவில் சிறுமி ” கணித ஆசிரியர் என்னை முட்டி போட வைத்து கையை கிண்ணம் போல குவித்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்க வைத்தார்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

`

இந்த வீடியோ வைரலானதால் பள்ளி நிர்வாகம் உடனடியாக அந்த சிறுமி மீதும் அந்த பெற்றோர் மீதும் பள்ளியின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இதுகுறித்து நிர்வாகம் தனது தரப்பில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததாகவும் அதில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை எனவும் கூறுகிறது. மேலும் பள்ளி மாணவ மாணவியர்களும் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என சொன்னதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அந்த சிறுமியின் வீடியோவை பார்த்த பலர் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வழக்கு பள்ளியின் மீது தான் பதியவேண்டும் எனவும் குரல் கொடுத்து வருகின்றனர். இது எஜுகேஷன் ஜிஹாத் என இந்து அமைப்புகள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

```
```

கர்நாடக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

…..உங்கள் பீமா