Friday, April 19, 2024
Home > செய்திகள் > லாவண்யா வழக்கு..! நியூஸ் செவன் பொய்யை அம்பலப்படுத்திய அண்ணாமலை..!

லாவண்யா வழக்கு..! நியூஸ் செவன் பொய்யை அம்பலப்படுத்திய அண்ணாமலை..!

3-322/12.57pm

சென்னை : தமிழக ஊடகங்கள் நடுநிலைதவறி ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளநிலையில் சிறுமி லாவண்யா வழக்கில் உண்மைக்குப்புறம்பாக நியூஸ் செவன் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அரியலூர் பகுதி மாணவி கட்டாய மதமாற்ற மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார். மரணிக்கும் முன்னர் தனது வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரிக்கவிடாமல் காவல்துறைக்கு முட்டுக்கட்டை போட்டதாக ஆளும்கட்சிமீது எதிர்க்கட்சியினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.

இதனிடையே தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய அதிகாரிகளுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என ஆணையம் அறிக்கை வெளியிட்டிருந்தது. மேலும் நேற்று முன்தினம் ஆணைய அதிகாரிகளின் சந்திப்புகள் அனைத்தையும் ரத்துசெய்து தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நியூஸ் செவன் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில்,

`

“அரியலூர் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்றம் காரணமில்லை. மாணவியின் பெற்றோர் சகோதரருக்கு மனநல ஆலோசனை வழங்கவேண்டும் என தேசிய குழந்தைகள்நல ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது” என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அப்படி எந்த ஒரு குறிப்பும் இல்லை.

```
```

மேலும் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை தேசிய குழந்தைகள்நல ஆணையத்தின் அறிக்கையை வெளியிட்டு, ” நியூஸ் செவன் சொல்கின்ற கருத்து தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் அறிக்கைக்கு எதிராக உள்ளது. உங்களது பார்வைக்கு முழு அறிக்கையும் இங்கே இருக்கிறது. இதை மக்களுக்கு முழுவதுமாக எடுத்துச்செல்வார்கள் என நம்புகிறேன்” என அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

…..உங்கள் பீமா