Tuesday, June 17, 2025
Home > அரசியல் > மாஸ்டர் பிளான் திமுக..! புலம்பும் திருமாவளவன்..! கப்சிப் காங்கிரஸ்..!

மாஸ்டர் பிளான் திமுக..! புலம்பும் திருமாவளவன்..! கப்சிப் காங்கிரஸ்..!

7-3-22/15.04pm

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் பணபலத்துடன் அதிக இடங்களை கைப்பற்றியது. மேலும் மேயர் பேரூராட்சி மற்றும் நகராட்சி தலைவர்கள் பதவியை திமுக தனது கூட்டணிக்கு வாரிவழங்கியிருந்தது.

ஆனால் நடந்த மறைமுக தேர்தலில் பல இடங்களில் திமுகவினரே பொறுப்பேற்றுக்கொண்டனர். இதனால் கூனிகுறுகிய முதல்வர் ஸ்டாலின் மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் மீடியாக்களில் அறிக்கை வெளியிட்டு கூட்டணிதர்மம் காக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் விசிக மற்றும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சில இடங்களை திமுக நிர்வாகிகள் இன்னும் விட்டுத்தரவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து விசிக வெளியிட்டுள்ள அறிக்கையில் “விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட 16 பதவிகளில் எட்டு இடங்களில் மட்டுமே அதிகாரபூர்வமாக பதவியேற்றிருக்கிறோம். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு திமுக பேச்சுவார்த்தையின் மூலம் மாநகராட்சி துணைமேயர் நகராட்சி பேரூராட்சி தலைவர்கள் பதவி என மொத்தமாக 16 இடங்களை வழங்கினார்கள்.

`

ஆனால் கடலூரில் துணை மேயர், ஜெயன்கொண்டத்தில் நகராட்சி தலைவர் பெண்ணாடம் பேரூராட்சி தலைவர், திண்டிவனம் நகராட்சி துணை தலைவர் ராணிப்பேட்டை நகராட்சி துணைத்தலைவர், கடத்தூர்,புவனகிரி, கொளத்தூர் பேரூராட்சிகளில் துணைத்தலைவர் பதவி ஆகியவற்றையே பெற்றுள்ளோம். மீதமுள்ள இடங்களில் திமுகவை சேர்ந்த எதிர்வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். நமது தலைவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு நிற்போம்” என அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

```
```

தமிழக காங்கிரஸ் தலைமை குளச்சல், ஸ்ரீபெரும்புதூர், கும்பகோணம் ஆகிய சில இடங்களில் மட்டுமே பதவியேற்றுக்கொண்டுள்ளது. காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட பல இடங்களில் திமுகவினரே நேற்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் வெற்றிபெற்றிருப்பதால் அதைப்பற்றி கேள்வியெழுப்பாமல் கப்சிப்பென அமைதி காக்கிறது. கேட்டால் வாங்கிய இடமும் பறிபோய்விடுமோ என அச்சத்தில் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

…..உங்கள் பீமா