Saturday, April 18, 2026
Home > செய்திகள் > நீட் தேர்வு..! மத்திய அரசு அதிரடி..! விழிபிதுங்கும் திமுக..!

நீட் தேர்வு..! மத்திய அரசு அதிரடி..! விழிபிதுங்கும் திமுக..!

5-2-22/12.00pm

சென்னை : நீட் தேர்வு ரத்து என்ற முழக்கத்தை முன்வைத்து கடந்த சட்டமன்றத்தேர்தலில் மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றசாட்டை முன்வைக்கின்றன. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் திமுக பல்வேறு நாடகங்களை நடத்திவருவதாக பிஜேபியினர் விமர்சித்துவருகின்றனர்.

நீட் தேர்வு விலக்கு சாத்தியமில்லை என தெரிந்தும் திமுக தனது அரசியல் நாடகத்தின் ஒருபகுதியாக இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூடியுள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாரத பிரதமர் மோடி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்மூலம் இனி தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இடங்களுக்கு அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணமே நிர்ணயிக்கப்படவேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் “மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்று முனைப்புடன் இருக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தடையற்ற, தரமான மற்றும் குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கல்வியை உறுதி செய்ய மத்திய அரசு ஒவ்வொரு தடையையும் உடைத்து வருகிறது.இந்த அறிவிப்பின் மூலம், இனி 50% தனியார் கல்லூரி மருத்துவ இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணத்தில் வழங்கப்பட வேண்டும் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதனால் திமுகவினர் நடத்தும் மருத்துவக்கல்லூரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் வேலூர் கிறித்தவ மருத்துவ கல்லூரியும் சிக்கலை சந்திக்கும் என சொல்லப்படுகிறது. பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பால் நீட் தேர்வில் வென்ற மாணவர்கள் வெளிமாநிலத்திற்க்கோ தொலைதூரமாகவோ மருத்துவம் பயில செல்ல தேவையில்லை. தமிழகத்தில் திமுகவினர் மற்றும் இதர அரசியல் கட்சியினர் நடத்தும் மருத்துவ கல்லூரிகளிலேயே மருத்துவம் பயில பிரதமரின் அறிக்கை வழிவகை செய்திருப்பதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

……உங்கள் பீமா