Sunday, May 3, 2026
Home > செய்திகள் > கோவிலில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை..! கிளம்பிய சர்ச்சை

கோவிலில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை..! கிளம்பிய சர்ச்சை

21-4-22/16.30PM

கேரளா : ஹிஜாப் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து சில அடிப்படைவாத கும்பல் கர்நாடகாவில் வன்முறையில் இறங்கியது. மேலும் இருபிரிவினருக்குள் மோதல் உருவாகும் சூழல் உருவானது. அதைத்தொடர்ந்து காவல்துறை எடுத்த கடும்நடவடிக்கைகளால் சூழ்நிலை கட்டுக்குள் வந்தது.

இதைத்தொடர்ந்து கர்நாடக கோவில்களில் பல இடங்களில் இஸ்லாமிய வியாபாரிகளுக்கு கோவில் வளாகங்களில் கடை போட அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே கம்யூனிஸ்டுகள் நிறைந்த மாநிலமான கேரளாவிலும் கோவிலில் இஸ்லாமியர்கள் நுழைய தடை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.

கண்ணூர் மாவட்டம் பையனூர் அருகே உள்ள குன்ஹிமங்கலம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மல்லியோட்டு பாலொட்டு திருக்கோவில் வளாகத்தில் இஸ்லாமியர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்கிற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த கோவிலில் ஏப்ரல் 14 முதல் 24 வரை பத்துநாட்கள் நாலூர் சமுதாயத்தினர் சார்பில் திருவிழா நடத்தப்படும். இந்த திருவிழாவின்போது இப்படி ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த குனிய மங்களம் சிபிஎம் கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலுக்கு ப்ரோகமன கலா சாகித்ய சங்கம் மற்றும் சிபிஎம் டி.ஒய்.எப்.ஐ போன்ற அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும்கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிபிஎம் கண்ணூர் மாவட்ட செயலாளர் எம்.வி ஜெயராஜன் கூறுகையில் வழிபாட்டுத்தலங்கள் புனிதமான இடங்களாகும். அவற்றை மோதல் உருவாகும் இடங்களாக யாரும் மாற்ற முயற்சிக்க கூடாது.

மதச்சின்னங்களை பயன்படுத்தி மக்களை பிளவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்வது இந்த மண்ணுக்கு நல்லதல்ல. கிறிஸ்துமஸ் இஃப்த்தார் போன்ற நிகழ்ச்சிகளில் அனைத்து மதத்தினரும் பங்குகொள்ளும் பாரம்பரியம் கேரளாவில் உள்ளது” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

……உங்கள் பீமா