Saturday, July 27, 2024
Home > அரசியல் > திமுக சட்டத்துறை அமைச்சர் மீது 23 குற்ற வழக்குகள்..! பிஜேபி வெளியிட்ட ஆதாரம்..!

திமுக சட்டத்துறை அமைச்சர் மீது 23 குற்ற வழக்குகள்..! பிஜேபி வெளியிட்ட ஆதாரம்..!

21-11-21/11.50am

சென்னை : திமுக சட்ட மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மீது 23 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பிஜேபி தரப்பு ஆதாரங்களை வெளியிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

திமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் மீது குற்றவழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தமிழக சட்டத்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சகத்தின் அமைச்சரான ரகுபதி மீதே வழக்குகள் இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட துரி அமைச்சராக இருக்கும் அவர் தன்மீதான வழக்குகள் மீது தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வழக்கின் போக்கை மாற்றி அமைக்க வாய்ப்பிருப்பதாக பிஜேபியினர் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் நடந்த கொலை ஒன்றில் திமுக எம்பி ரமேஷ் சிறை சென்று ஜாமீன் வாங்கியது குறிப்பிடத்தக்கது. திமுக தலைவர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீது நிலா அபகரிப்பு வழக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் விசாரணையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெகத்ரட்சகன் செந்தில்பாலாஜி மற்றும் இதர முக்கிய தலைவர்கள் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது கவனிக்கவேண்டிய ஒன்றாக நடுநிலையாளர்களால் சொல்லப்படுகிறது.

`

திமுக அமைச்சர் ரகுபதியை சம்பந்தப்பட்ட துறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலுவாக கோரிக்கை எழுப்பிவருகின்றன. இது குறித்து பிஜேபி ஐடி விங் நிர்மல்குமார் தனது பதிவில்”சட்டம் மற்றும் சிறைதுறை அமைச்சர் ரகுபதி தேர்தல் அபிடவிடில் தன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கும் உள்ளதாக காட்டுகிறார், தற்போது அதே துறைக்கு அமைச்சராக உள்ளார். இது திருடன் கையில் சாவி கொடுத்ததை போல உள்ளது” என தெரிவித்துள்ளார்.

திமுக சட்ட மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி குறித்து மேலும்

```
```

https://myneta.info/TamilNadu2021/candidate.php?candidate_id=2041 இந்த இணையதளத்தில் காணலாம்.

……உங்கள் பீமா